Last Updated:Apr 14, 2026 7:09 AM IST
தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் தலைவர்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் நேற்றைய பரப்புரையில் முன்வைத்த கருத்துகள் என்ன...?
தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் தலைவர்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் நேற்றைய பரப்புரையில் முன்வைத்த கருத்துகள் என்ன...?
சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு இன்னும் ஒரு வாரகாலமே அவகாசம் இருக்கும் சூழலில், அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் 5ஆம் கட்ட பரப்புரையைத் தொடங்கினார். அப்போது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், எதிர்வரும் தேர்தல் என்.டி.ஏ. எனும் ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ராணிப்பேட்டையில் பரப்புரை செய்த முதலமைச்சர், மத்திய அரசின் தவறான கொள்கைகளால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக கீழே படுத்திருப்பதாக விமர்சித்தார். மேலும், தொகுதி மறுவரையறை பிரச்னையையும் குறிப்பிட்டு பேசினார்.
இதனிடையே, திருச்சியில் பரப்புரை செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓரணியில் தமிழ்நாடு திட்டத்திற்காக பொதுமக்களிடம் வாங்கி செல்போன் எண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, திண்டுக்கல்லில் வாக்கு சேகரித்த அவர், தொகுதி மறுவரையறை குறித்த முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் ஆட்சிக்கு வந்தால், பெற்றோரை கைவிடுவோரின் குடியுரிமையை ரத்து செய்வேன் என கூறினார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு அரசே கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் எனவும் சீமான் கூறினார்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
.png)





English (US) ·