Last Updated:Feb 22, 2026 8:51 PM IST
திருவண்ணாமலை ஆரணி பையூர் எம்.ஜி.ஆர் நகரில் வினோத்குமார், இரண்டாவது மனைவி கவிதாவை அடித்து கொலை செய்தார்; விபத்து நாடகம் ஆடியவர் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மனைவி வேறு ஒரு நபரிடம் வீடியோ காலில் பேசியதையறிந்த கணவன் அவரை அடித்தே கொலை செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த கவிதா என்பவருடன் வினோத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வினோத்குமார் கவிதாவை 2வது திருமணம் செய்ய, இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இரு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் வினோத்குமார் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிதாவிற்கும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது இரண்டாவது மனைவி கவிதா வேறு நபருடன் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது வினோத்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் கவிதாவை கையால் சரமாரியாக தாக்கியதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவர் ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வினோத்குமாரிடம் விசாரணை செய்ய, தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். வினோத்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2வது மனைவி வேறு நபரிடம் வீடியோ காலில் பேசியதால் ஆத்திரம்.. கணவன் செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது?
.png)






English (US) ·