Last Updated:Feb 09, 2026 7:58 AM IST
TVK Vijay | தவெக தலைவர் விஜய் தன் மூலமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறி அந்த புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது செல்போனில் காண்பித்தார்.

மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது தவெக தலைவர் விஜய் தன் மூலமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறி அந்த புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது செல்போனில் காண்பித்தார். தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் வேண்டாம் என்றும் அவர் மீண்டும் நடிக்க வந்தால் அவரது படம் வெளிவர எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தவெகவில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜு, "மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும். அதற்காக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விஜய் வந்தார்.
தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக் கூறி 10 நிமிடம் 20 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் உட்கார்ந்திருந்து சந்தித்தார். சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்து பிரச்சனையை கூறினார். விஜய் நேரில் வந்து கேட்கிறார் என்பதற்காக அவருக்கு உதவ வேண்டும் எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி.
அதற்காக உடனுக்குடன் டெல்லிக்கு பேசி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்பட்டது. இதனால், திட்டமிட்ட தேதியில் மெர்சல் ரிலீஸானது. விஜய் வந்ததை நாங்கள் குறைகூறவில்லை.
அனைவருக்கும் பொதுவானவர்கள் நாங்கள். அவருக்கு உதவ வேண்டியது ஆட்சியில் இருந்த எங்களின் கடமை. ஆனால் அப்போது விஜய் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியம். மெர்சல் பட ரிலீஸுக்கு உதவியதற்காக வாழ்நாள் முழுக்க நன்றி கடனாக இருப்பேன் என விஜய் கூறினார். இப்போது விஜய் அதிமுக பெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார்." என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார் கடம்பூர் ராஜு.
மேலும், விஜய் ஆரம்பித்துள்ளது வெற்றிக் கழகம் அல்ல, வெற்று கழகம் தான் என்றும் அவர் விமர்சித்தார். அதேபோல், விஜய்க்கு அரசியல் வேண்டாம் என்றும் அவர் மீண்டும் நடிக்க வந்தால் அவரது படம் வெளிவர எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்றும் கடம்பூர் ராஜு கூறினார். மேலும், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு களநிலவரம் தெரியும் என்றும் ஆனால் அவரது பேச்சை கேட்கும் நிலையில் விஜய் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அடுத்த தங்கம்.. வரும் நாட்களில் இந்த உலோகம் விலை உயரும்!
தங்கம், வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கம்; முதலீட்டாளர்கள் செம்பு பக்கம் திரும்பினர்.
மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் செம்பு முக்கியம்.
நிபுணர்கள் கணிப்பின்படி, செம்பு விலை வரும் மாதங்களில் உயர வாய்ப்பு உள்ளது.
.png)







English (US) ·