Last Updated:Feb 10, 2026 6:29 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் இன்று காலையில் பனிமூட்டம் நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை உட்பட 14 மாவட்டங்களில் வரும் 13ஆம் தேதி வரை அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் காணப்படும் நிலையில், வரும் 13ஆம் தேதி வரை அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நீடிக்கும் எனவும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வரும் 13ஆம் தேதி வரை லேசான பனிமூட்டம் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தருமபுரி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் வரும் 13ஆம் தேதி வரை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சேலம், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக் கூடும் என்றும் கணித்துள்ளது.
சென்னை உட்பட 14 மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி வரை பனிமூட்டம் நீடிக்கும்... வானிலை மையம் கணிப்பு
.png)






English (US) ·