Last Updated:May 09, 2026 7:51 AM IST
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர்வி அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் 3வது முறையாக சந்தித்த நிலையில் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால் இன்று பதவியேற்பு விழா நடக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர்வி அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் 3வது முறையாக சந்தித்த நிலையில் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால் இன்று பதவியேற்பு விழா நடக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றிய போதிலும் ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்வி அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, காங்கிரஸ், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. இதில் 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்டிய நிலையில், தவெக-வின் பலம் 113 ஆக உயர்ந்தது.
2வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரிய போதும், தவெகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் ஆளுநர் ஆர்வி அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெவுக்கு ஆதரவு அளித்ததால் ஒட்டுமொத்த பலம் 116 ஆக உயர்ந்தது.
இதனிடையே, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தருவதாக தகவல் பரவிய நிலையில், இறுதியில் திமுக கூட்டணியில் தொடரப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்தது. இருப்பினும், 3வது முறையாக ஆளுநர் மாளிகை சென்ற தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர்வி அர்லேக்கரிடம் கடிதம் வழங்கினார்.
விஜய் கடிதம் வழங்கி 12 மணி நேரத்திற்கும் மேல் கடந்த நிலையில் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இதனால் இன்று பதவியேற்பு விழா நடக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
.png)







English (US) ·