Last Updated:May 09, 2026 9:27 AM IST
ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள காட்டாளன் படத்தின் முதல் பாடலின் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள காட்டாளன் படத்தின் முதல் பாடலின் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகரான ஆண்டனி வர்கீஸை வைத்து காட்டாளன் என்ற படத்தை பால் ஜார்ஜ் இயக்கி உள்ளார். இதில், நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாகவும், தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. காந்தாரா படம் மூலம் புகழ் அடைந்த இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
.png)







English (US) ·