Last Updated:Mar 09, 2026 10:58 PM IST
Trisha | த்ரிஷா விவகாரத்தில் நடந்தது என்னவென்பது பற்றி நடிகர் பார்த்திபன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது என்ன?.

நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் உள்ளதாக குற்றஞ்சாட்டி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில் விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன், குந்தவை இப்போது வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என்று குந்தவை கெட்டப்பில் காண்பிக்கப்பட்ட த்ரிஷா படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றிய நடிகை த்ரிஷா, அடிப்படை அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் தாழ்ந்த சொற்கள் யாரை நோக்கி வீசப்படுகிறதோ, அவரை விட, அந்தச் சொற்களைப் பேசுபவரின் தரத்தைத்தான் பிரதிபலிக்கும் என காட்டமாக பதிலளித்திருந்தார். மைக்கைப் பிடித்துப் பேசுவதால் ஒருவர் சொல்லும் கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது என்றும் அது ஒரு முட்டாள்தனமான கருத்து என்றும் சாடியுள்ளார். ஒரு தனிநபரின் வேண்டுகோளுக்கிணங்க தனது பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்வில் சேர்க்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார்.
நடிகை த்ரிஷா குறித்த தனது கருத்துக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வருத்தம் தெரிவித்து 'எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது என்றும் இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த விவகாரம் தொடர்பாக பார்த்திபன் நீண்ட வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு நிகழ்ச்சியில் விஜய், அஜித் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு புகைப்படம் கான்பிக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை பார்த்ததும் நான் என்ன பேசுவது எனத் தெரியவில்லை. திகைத்துவிட்டேன் அது தான் உண்மை. குற்றம் சுமத்துகிற மாதிரி நான் பேசணும் நினைத்து எனக் கூறுவது பொய்." என்று தெளிவுபடுத்தினார். அதேபோல், "நான் யாருக்கும் அடிமை இல்லை. யாரிடமும் காசு வாங்கிவிட்டு அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு போகவில்லை. என்னுடைய மரணம் வரைக்கும் அப்படி நான் செய்ய மாட்டேன். காசுக்காக எந்த தவறும், எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை." என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.
மேலும், "அப்படி மகளிர் தினத்தன்று நான் பேச வேண்டும் என்று நினைத்தால் வேலுநாச்சியார் பற்றி பேசலாம், டயானா சார்லஸ் பத்தி பேச ஆசைப்படலாம், நான் எப்பவும் பேசக்கூடிய அன்னை தெரசாவை பற்றி, மறுபடியும் ஒரு தடவை பேசலாம் என்று ஆசைப்படலாம் ஆனால் இப்படி நான் ஆசைப்பட்டேன் என்று சொல்வது சரி அல்ல." என்றும் பேசினார்.
பார்த்திபன் மேலும்"மேடையில் புகைப்படத்தை பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தபோது அருகே குந்தவை குந்தவை எனக் குரல் எழுப்பப்பட்டது. விஜய் நிறைய போராட்டங்களை சந்தித்து கடந்து வந்துகொண்டிருக்கிறார். கரூர் பிரச்சினையில் விஜய் மீது விமர்சனங்கள் வந்ததை தவிர அவருக்கு இவ்வளவு பாதிப்பு வரவில்லை. பாதிப்பு வர காரணமானது அந்த திருமண நிகழ்ச்சி. திருமண நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடிமனதில் இருந்தது.
அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு போகவில்லை. மேடையில் குந்தவை குந்தவை என்று சொல்லவும் வீட்டிலேயே அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கத்தில் கூறினேன். உண்மையிலேயே பெரிய ஆதங்கம். அதனால் நண்பர் சமுத்திரக்கனி பேசினார். சமுத்திரக்கனி யாரிடம் காசு வாங்கி பேசவில்லை. அன்பின் மிகுதியில் பேசினார். இதையெல்லாம் பார்த்து ஆதங்கத்தில் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கினேன். அப்போதே பாண்டே குந்தவை விஷயத்தை தவிர்த்து இருக்கலாம் எனக் கூறினார். அப்போதே சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு போன் செய்து நான் பேசிய வீடியோ டெலீட் செய்ய சொல்லிவிட்டேன்.
ஆனால் வேறு வீடியோவாக அது வெளிவந்துவிட்டது. இந்த விஷயத்தில் நான் சொன்னது ஒரு பெண்மணியை பற்றி. எனக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது மனுஷியை பற்றி சொன்னேன். இந்த பிரச்சினையில் உள்ள 3 பேரை எடுத்துக் கொண்டால் என் அன்பு நண்பர் விஜய். 2வது விஜய்யின் மனைவி. 3வது மனுஷியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால், நான் பேசியது அவரை பற்றி தான். பாண்டே சொன்னவாறு அவரை பற்றி பேசுவதை நான் தவிர்த்திருக்கலாம். ஆனால் பெண்களுக்கு எதிராக நான் பேசியதாக நிறைய பதிவு செய்ததை பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது.
இதற்காக அன்று மதியமே வருத்தம் தெரிவிக்க நினைத்து வீடியோ தயாரானது. அதை வெளியிடும்போது ட்விட் ஒன்று வந்தது. அதில் நானே விரும்பி போட்டோ போடச்சொன்னதாக சொல்லப்பட்டிருந்தது. இப்படி ஒரு ட்வீட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தமே தெரிவித்திருக்க மாட்டேன். அதனை பார்த்த பின் எனக்கு மனதில் ஏற்பட்ட விஷயம் இந்த வீடியோ வெளியிட வேண்டி வந்தது. காரணம், ஒரு 3வது மனுஷியின் 3ம் தர ட்வீட், அது எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு இது.
என்னுடைய செயலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என நான் கூறவில்லை. சமீபகாலமாக அவரைப் பற்றி வந்த கொச்சையான அசிங்கமான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவர் உட்பட அனைவர் பேசியதற்கும் அவர் பதில் கூறியிருந்தால் நான் இதனை வரவேற்றிருப்பேன். எதற்குமே பதில் கூறாமல் எனக்கு மட்டும் கண்டனம் தெரிவித்ததால், நான் வருத்தம் தெரிவித்தது தவறு என்று நிறைய பேர் கூறியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் எனது நன்றி. காரணம் அவர்கள் உண்மைக்கு அருகில் இருக்கிறார்கள். அது என்ன உண்மை?" என்று கூறி வீடியோவை முடித்துள்ளார். இந்த வீடியோ விளக்கம் தொடரும் என்றும் பார்த்திபன் அதில் கூறியிருக்கிறார்.

விரக்தியில் தற்கொலை செய்த தந்தை ... துக்கம் தாளாமல் மகளும் தற்கொலை...
சென்னையில் திருமணத்தை நடத்த முடியாத மன உளைச்சலில் தந்தை தற்கொலை
தந்தை இறந்த துக்கம் தாளாமல் அவரது மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்தார்
இருவரும் உயிரிழந்த சம்பவத்தில் வேறு காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை
.png)






English (US) ·