4 ஆண்டுகளில் 750 ஊசிகள்.. அஜித், விஜய் பட வில்லனின் இன்றைய நிலை... யார் இவர் தெரியுமா?

21 hours ago 18

Last Updated:Feb 07, 2026 1:30 PM IST

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் வில்லனாக நடித்தவர், இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 வருடங்களில் 750 ஊசிகள் செலுத்திக்கொண்டுள்ளார்.

 ஒரு காலத்தில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக வலம் வந்தவர், இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு வீல் சேரில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு வில்லனாக மிரட்டியிருந்தார். யார் அவர் தெரியுமா?

 தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக தனது கரியரை தொடங்கியவர் பொன்னம்பலம்.  1988-ல் வெளியான ‘கலியுகம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அடுத்தடுத்து ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றி விழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ என கமல் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

 சரத்குமார் உடன் அவர் நடித்த ‘நாட்டாமை’ திரைப்படம் பொன்னம்பலத்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ல் வெளியான ‘காட்டேரி’ படத்தில் நடித்திருந்தார்.

 விஜயுடன் செந்தூரப்பாண்டி, அஜித்துடன் அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்பலம், மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாத நிலையில், உதவி கோரி வீடியோ வெளியிட்டார். அவருக்கு சரத்குமார், தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் உதவிக்கரம் நீட்டினர்.

 இது தொடர்பாக அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது. கடந்த 4 ஆண்டுகளாக 750 ஊசிகளை போட்டு இருக்கிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எனக்கு முதல் ஆளாக வந்து உதவியவர் சிரஞ்சீவி” என பேசியிருந்தார் பொன்னம்பலம்.

 ஒரு காலத்தில் வில்லன் நடிகராக கட்டுடல் மேனியுடன் வலம் வந்த பொன்னம்பலம் இன்று வீல் சேரில் அமர்ந்து ஆடுவது போன்ற சமீபத்திய வீடியோ ரசிகர்களிடையே வருத்தமடையச் செய்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Weather Update | பனி 'அவுட்'.. வெப்பம் 'இன்'.. தமிழகத்தில் இனி வெப்பநிலை படிப்படியாக உயரும்.. வானிலை மையம் அப்டேட்!

தமிழகத்தில் இனி வெப்பம் உயரும் - வானிலை மையம் அப்டேட்!

  • தமிழகத்தில் 11ஆம் தேதி வரை வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை உயரலாம்.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டம்.

  • தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக்காற்று வீசும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article