Last Updated:Dec 20, 2025 11:13 PM IST
பாதசாரிகள் சாலையை கடப்பதற்கும், ஒவ்வொரு வார இறுதியிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

சென்னை பாடி மேம்பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விடுமுறை நாள் என்பதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் பாடியில் நெரிசல் ஏற்பட்டது.
அம்பத்தூரில் இருந்து பாடி மேம்பாலப் பகுதிக்கு வரும் சாலை குறுகலாக இருப்பதால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல, அண்ணாநகர் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் இருந்து பாடியை நோக்கி வரும் வாகன ஓட்டிகளும் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
பாதசாரிகள் சாலையை கடப்பதற்கும், ஒவ்வொரு வார இறுதியிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
First Published :
Dec 20, 2025 11:13 PM IST
.png)






English (US) ·