ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி!

2 hours ago 17

Last Updated:Dec 21, 2025 9:29 PM IST

அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணம் முன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடந்து கிறிஸ்மஸ் பண்டிகை, மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டு வருகின்றனர்.   

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லை செல்வதற்கு 1,400 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது குறைந்தபட்சம் 2,000 முதல் 4,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு வழக்கமான நாட்களில் 800 ரூபாய் முதல் 1,200 வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது 3,000 முதல் 5,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் நாகர்கோவில் செல்வதற்கு அதிகபட்சமாக 4,000 ரூபாயும், திருச்சி செல்வதற்கு 3 ,600 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இந்தக் கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article