புதுடில்லி, மே 9– அண்மையில் நடைபெற்ற கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்ட மன்றத் தேர்தல்களில், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிக ஆர்வம் காட்டியுள்ளது தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தேர்தல் நடந்த மாநிலங்களிலேயே மேற்கு வங்கத்தில் தான் மிக அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மொத்த வாக்குப்பதிவு
93.71 சதவீத வாக்களித்தவர்கள்: 6.81 கோடி வாக்காளர்களில் 6.38 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
பாலின வாரியாக: பெண்கள் 93.8 சதவீத பேரும், ஆண்கள் 92.06 சதவீத பேரும் வாக்கு செலுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
தமிழகத்திலும் பெண்களின் பங்கேற்பு ஆண்களை விட முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு: மொத்தமாக 85.01 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பெண்களின் பங்களிப்பு 86.2 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 83.77 சதவீத மாகவும் உள்ளது.
புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 89.82 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கும் பெண் வாக்காளர்கள் அதிகபட்சமாக 91.39 சதவீத வாக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.
அசாம்: இங்கு இறுதி வாக்குப் பதிவு 85.74 சதவீதம் எட்டியது. இதில் பெண்களின் வாக்குப்பதிவு 86.53 சதவீதமாகவும், ஆண்களுடையது 84.95 சதவீத ஆகவும் இருந்தது. கேரளா: கேரளாவில் மொத்தமாக 78.11 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அம்மாநிலத்தில் ஆண்களின் பங்கேற்பு 74.9 சதவீதமாக இருந்த நிலையில், பெண்கள் 81.17 சதவீதம் என்ற அளவில் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் அனைத்து மாநிலங்களிலும் ஆண்களை விட பெண்களே ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் முன்னிலை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.png)
1 hour ago
15





English (US) ·