திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 25.12.2022 அன்று திருச்சி முதல் சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறி ஐஎம்ஏ திருமண மண்டபம் அருகில் ஆமுரை சேர்ந்த சரசு இவரது மகன் நவீன் குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது அரசு பேருந்து மோதியதில் நிகழ்விடத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழப்பு, இறந்த சரசுக்கு கணவர் மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

முசிறி சார்பு நீதிமன்றத்தில் இறந்த சரசுவின் கணவர் சேகர் மற்றும் மகன், மகள் ஆகிய மூவரும் இழப்பீடு கேட்டு இரு வழக்குகள் முசிறி சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு பதிவி செய்தனர், விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தி கடந்த ஏப்ரல் மாதம் ரூபாய் 54 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு பணத்தை செலுத்தாத பட்சத்தில் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் திருச்சி கிளை இரு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார், இதனை தொடர்ந்து இன்று வரை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் திருச்சி கிளை இழப்பீட்டுத் தொகை பணம் செலுத்தாத பட்சத்தில் இன்று முசிறி புதிய பேருந்து நிலைய பகுதிக்கு பயணிகளை ஏற்று வந்த இரு அரசு பேருந்துகளை நிறுத்தி
முதுநிலை கட்டளை பணியாளர்கள் ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் இரு அரசு பேருந்துகளை ஜப்தி செய்து பயணிகளை இறக்கி விட்டு இரு

பேருந்துகளை முசிறி சார்பு நீதிமன்றம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது, இதனால் பேருந்தில் வந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர், இரு பேருந்துகள் ஜப்தி செய்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
.png)






.png/jcr:content/renditions/cq5dam.web.1280.1280.png)

English (US) ·