Last Updated:May 11, 2026 8:05 PM IST
எம்.ஜி.ஆர் பள்ளி கட்டணம் கட்டி படிக்க வைத்த நடிகை இன்று நகைச்சுவையில் லேடி சூப்பர் ஸ்டார். யார் தெரியுமா?

45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இந்த நடிகைக்கு எம்.ஜி.ஆர் கல்வி கட்டணம் செலுத்தி படிக்க வைத்திருக்கிறார். இன்று வரை இவருடைய இடத்தை தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகையாலும் பிடிக்க முடியவில்லை. காரணம், குணச்சித்திர கதாபாத்திரத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றே இவரை சொல்லலாம். யார் இவர் தெரியுமா?
9-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு பட வாய்ப்பு வருகிறது. விஜய்குமார், கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த ‘வெள்ளி ரதம்’ படத்தில் (1979) சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் கோவை சரளா. எம்.ஜி.ஆர் மீது மிகவும் பற்று கொண்டவர். அவருடைய படங்களை பார்த்து தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
1983-ம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’, 1984-ல் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ என முன்னணி நடிகர்களுடனே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். ரஜினி, கமல், விஜய், அஜித் என பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் தொடங்கி சந்தானம், யோகிபாபு, சூரி உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கோவை சரளாவின் உடல்மொழிக்கும், டைமிங் காமெடிக்கும் நிகரான நடிகைகள் தமிழ் சினிமாவில் இல்லை எனலாம். காமெடி நடிகர்கள் இருந்தாலும், கோவை சரளாவுக்கு பின் குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களில் பொருந்தும் நடிகை தமிழ் சினிமாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ பட சீரிஸில் கோவை சரளாவின் நடிப்பு மிரட்டியிருக்கும்.
எம்.ஜி.ஆர் குறித்து பேட்டி ஒன்றில் நெகிழ்ந்து பேசியிருந்தார் கோவை சரளா. அவர் கூறும்போது, “அப்போது எனக்கு 10 வயது. எம்ஜிஆர் மீது பைத்தியமாக இருப்பேன். அவர் படங்களை அதிகம் பார்ப்பேன். அவர் கோயம்புத்தூருக்கு வந்தால், அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் நின்றிருப்பேன். அவர் வருவதை பார்க்க அங்கேயே நின்று கொண்டிருப்பேன்.
எம்.ஜி.ஆரும் என்னைக் கவனிப்பார். ஒருநாள் அப்படி என்னைப் பார்த்தவர், ‘நீ ஸ்கூல் போக மாட்டியா? ஏன் இங்கேயே நிற்கிறாய்’ என்று கேட்டார். ‘உங்களைப் பார்க்க தான் இங்கே நிற்கிறேன். நான் பள்ளியில் படிக்கிறேன்’ என்றேன். திடீரென என் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியைக் கேட்டார். பயந்துவிட்டேன். பிறகு என் வீட்டு முகவரி, அப்பா, அம்மா பற்றிய விவரங்கள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
சில நாட்கள் கழித்து, என் பள்ளிக்கு ஒரு கடிதம் வந்தது. எம்ஜிஆரிடமிருந்து வந்த அந்தக் கடிதத்தால் கோயம்புத்தூர் முழுவதும் நான் பிரபலமாகிவிட்டேன். அது எனக்கு மிகுந்த பெருமையாக இருந்தது. நான் கேட்காமலேயே, வருடா வருடம் என்னுடைய பள்ளிப் பாடக் கட்டணத்தைச் (Fees) செலுத்தி எனக்கு உதவி செய்தார். அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட என்னால் நடிக்க முடியாமல் போனது வருத்தமே” என்று பேசியிருந்தார்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.
நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.
.png)








English (US) ·