ADMK Jayakumar Post | பிளவுப்படும் அதிமுக…? பரபரப்பான நேரத்தில் ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோ பதிவு

1 hour ago 8

Last Updated:May 11, 2026 8:21 PM IST

அதிமுகவுக்குள் பிளவா எனும் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 தனி பெரும்பான்மை இல்லாமல், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தல் முடிவு வந்ததில் இருந்து அவர் பதவி ஏற்புக்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தது வரை அது தொடர்பான பேச்சுகள் பரபரப்பாக எழுந்திருந்தன.

 இதற்கிடையில் இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியிலும் பெரும் குழப்பங்கள் நிலவிவருகிறது. தவெகவின் ஆட்சி அமைப்பு விவகாரங்களின் பின்னால், அதிமுகவின் விவகாரங்கள் பெரிதாக வெளியேவராமல் போனது.

 குறிப்பாக அதிமுகவில் பிளவா எனும் சந்தேகங்களும் எழுந்துவந்தன. இதனை உறுதி படுத்தும் வகையில், இன்று காலை எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பை முடித்துக் கொண்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் 17 எம்.எல்.ஏக்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக ஏற்க வேண்டும் என தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

 அதேசமயம், காலை சட்டமன்றம் வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்காத சி.வி. சண்முகம், இன்று மாலை சட்டமன்றம் சென்று பதவி ஏற்றார். அதுமட்டுமின்றி தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை அவரது ஆதரவாளர்களுடன் சந்தித்து எஸ்.பி. வேலுமணியை அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்திருப்பதாக 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மனு கொடுத்தனர்.

 இதன் பிறகு அதிமுகவுக்குள் கூச்சல் குழப்பம் இருப்பது உறுதியானது எனும் ரீதியில் தகவல்கள் வருகின்றன. அதேசமயம், அதிமுகவுக்குள் பிளவு என்பதை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். மேலும், இன்று மாலை அவரது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துவிட்டு வெளியேவந்தபோது அவர்களும், கட்சிக்குள் சின்ன பிரச்சனை அது சரியாகிவிடும் எனத் தெரிவித்தனர்.

 இந்நிலையில் 2026 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியைச் சந்தித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் இல்லத்தில் அறுபது அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கழக கொடி” என பதிவிட்டு, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் விவசாயி எனும் படத்தில் வரும் ‘பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி... அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி...’ எனும் பாடல் வரிகளுடன் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ் என்ன தெரியுமா?

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

  • 5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.

  • நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.

  • போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article