KC Palanisamy Vs EPS: திமுக, தவெகவுக்கு எதிரான போட்டியில் அதிமுக காணாமல் போய்விடும் என எச்சரித்த அவர், கட்சியை ஒன்றுபடுத்தி மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர ஒரு திட்டத்தை முன்வைத்து இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
3 Min read
Published : May 16 2026, 06:52 PM IST
18

Image Credit : our own
திமுகவுக்கு எதிர்காலமே இருக்காது திமுக VS தவெக என்றுதான் இனி வரும் காலங்களில் அரசியல் களம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும்,பொதுமக்களும் என் கட்சிக்காரர்களுமே நினைக்கத் துவங்கியிருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் உங்களை எட்டவில்லையா? என கே.சி.பழனிசாமி இபிஎஸ்-க்கு பரபரப்பு அறிக்கை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
28
Image Credit : Asianet News
அதில் எடப்பாடி பழனிசாமி அவர்களே, வேலுமணியும், சி.வி சண்முகமும் செய்தது தவறு இதை நான் வெளிப்படையாகவே பல தொலைக்காட்சிகளிலும், எனது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருக்கிறேன் எனக்கு அதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் சில உண்மை நிலைகளை உணர்ந்து கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் தவறி விடக்கூடாது. நான்கரை ஆண்டு காலம் நீங்கள் முதலமைச்சராக இருந்தீர்கள். ஆனால் 2021 தேர்தலில் உங்களால் ஸ்டாலினை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்பட்டது.
38
Image Credit : our own
ஐந்தாண்டு காலம் நீங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்டீர்கள். ஆனால் தற்பொழுது கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. அதற்குக் காரணம் பொதுமக்கள் பார்வையில் நீங்கள் மேலும் கட்சியிலிருந்து சிலரை நீக்கியது, கட்சியை சரியாக வழிநடத்தாது. யாரையும் அனுசரித்து செல்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு தான். ஒருவேளை நீங்கள் வென்று ஆட்சி அமைத்திருந்தாலோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவாவது வந்திருந்தாலோ இந்த குற்றச்சாட்டுகள் பொய்த்திருக்கலாம்.
48
Image Credit : Asianet News
இன்றைய நிலையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் மிக மோசமான ஆட்சியை நடத்திய திமுகவையும் ஸ்டாலினையுமே உங்களால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சி அரசியல் நடத்தி வீழ்த்த முடியாமல் மூன்றாவது இடத்திற்கு சென்று இருக்கிறீர்கள். அப்படி இருக்கிற பொழுது இன்று ஒரு சினிமா நடிகராக அரசியல் செய்கிற, இளைஞர்களை வைத்து அரசியல் செய்கிற, அதிமுக வாக்கு வங்கியை பிரித்து அதன் தலைவர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்கிற விஜய்யை நீங்கள் எப்படி வீழ்த்தப் போகிறீர்கள்? திமுக என்றைக்குமே எதிர்க்கட்சி அரசியலுக்கு மிகவும் பழக்கப்பட்டவர்கள், அவர்கள் வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள் அவர்களை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள்?
58
Image Credit : Asianet News
இன்றைய சூழலில் கட்சியின் கீழ் மட்டத்தில் இருக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டதை சேர்ந்த சிலர் உங்கள் மீது நம்பிக்கை இழந்து சுயநலம் கொண்டு தவெகவுக்கு தாவிக் கொண்டிருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியுமா? அதிமுகவின் எதிர்காலம் என்பது திமுகவை சார்ந்து சிலர் சென்று விடுவார்கள் தவெகவை சார்ந்த சிலர் சென்று விடுவார்கள். அதிமுகவுக்கு எதிர்காலமே இருக்காது திமுக VS தவெக என்றுதான் இனி வரும் காலங்களில் அரசியல் களம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும்,பொதுமக்களும் என் கட்சிக்காரர்களுமே நினைக்கத் துவங்கியிருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் உங்களை எட்டவில்லையா? மீண்டும் அதிமுகவை ஆளும்கட்சியாக கொண்டு வருவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
68
Image Credit : Asianet News
இதுவரை கவுண்டர் + வன்னியர் என்கிற சாதிய அரசியல் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் உங்களுக்கு கை கொடுத்தது. ஆனால் தற்பொழுது வடக்கு மண்டலத்தை சி.வி.சண்முகம் தலைமையிலான அணியும் மேற்கு மண்டலத்தை எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணியும் சூறையாடிவிட்டது. இன்றைக்கு தேர்தல் வைத்தால் கடந்த தேர்தலில் பெற்ற 25% வாக்கும் குறைந்து 15% க்கும் கீழ் சென்றுவிடும். அப்பொழுது இனி வருகிற தேர்தலில் சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே உரித்தான கட்சியாக அல்லவா அதிமுக சுருங்கி இருக்கிறது. இதை எப்பொழுதுதான் உணர்வீர்கள்?
78
Image Credit : Asianet News
* நீங்களே பொதுச் செயலாளராக தொடருங்கள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை 2017 பொதுக்குழு தீர்மானத்தின் படி 11 பேர் கொண்ட குழுவை அமைப்போம். அந்தக் குழு என்னுடைய தலைமையில் அமையட்டும் மீதம் இருக்கிற 10 பேரை மண்டல வாரியாக 25 தொகுதிக்கு ஒருவர் வீதமாக அதிமுக தொண்டர்கள் அடையாளப்படுத்தும். அந்தக் குழு கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்து உங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கட்டும். அதன்படி நீங்கள் செயல்படுங்கள்.
* திமுகவை விட, பாஜகவை விட நாம் மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இந்த அரசாங்கம் கவிழும் இப்பொழுது நாம் ஆட்சி அமைக்க சூழ்நிலையை உருவாக்குவோம். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான அதிமுக கட்சியினரை வெற்றி பெற வைப்போம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை பெறுவோம். இப்பொழுதாவது நீங்கள் ஒரு சுயநலமில்லாத முடிவை எடுப்பீர்களா?
88
Image Credit : our own
* கட்சியை ஒன்றுபடுத்தி சசிகலா, தினகரன், சிவி சண்முகம், வேலுமணி அவர்களோடு சென்றவர்கள், ஒதுங்கியவர்கள், விலகியவர்கள் என அனைவரையும் அரவணைத்து எம்ஜிஆர் வழியில் ஒரு தொண்டனை கூட இழந்து விடாமல் யாருடைய எதிர்காலமும் பாதிக்கப்படாமல், யாருடைய கருத்துக்களும் புறக்கணிக்கப்படாமல் , தவெகவையும், திமுகவையும் வீழ்த்துவதை மட்டுமே லட்சியம் என்று நாம் செயல்படுவோம். இதை உருவாக்க என்னால் முடியும் ஆனால் ஒத்துழைப்பு கொடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா தெளிவுபடுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
.png)
1 hour ago
8








English (US) ·