5 zodiac signs who spend more money: ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பணத்தை அதிக அளவில் செலவு செய்பவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
17
Image Credit :
AI Generated
அதிக செலவு செய்யும் ராசிகள்
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு. சில ராசிக்காரர்கள் பண விஷயங்களில் மிக கவனமாகவும், சேமிப்பதில் ஆர்வம் காட்டுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வேறு சிலரோ பணத்தை சம்பாதிப்பதை விட, செலவு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்களின் கையில் பணம் கிடைத்தால் அது வேகமாக காணாமல் போய்விடும். பணம் கிடைத்தவுடன் அதை தண்ணீர் போல செலவு செய்யும் பழக்கத்தை கொண்ட ஐந்து ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
27
Image Credit :
AI Generated
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே ஆடம்பரம் மற்றும் ராஜ வாழ்க்கையை விரும்பக் கூடியவர்களாக உள்ளனர்.
- இவர்கள் எப்போதும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்க விரும்புவார்கள்.
- இதன் காரணமாக உயர் ரகப் பொருட்கள், விலையுயர்ந்த பரிசுகள், ஆடம்பரமான விருந்துகள் என பணத்தை வாரி இறைப்பார்கள்.
- தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளவும், மற்றவர்களுக்கு சிறந்தவற்றை வழங்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.
- மேலும் தரமானப் பொருட்களை பயன்படுத்த விரும்புவதால் இவர்களின் செலவு அதிகமாகிறது.
37
Image Credit :
AI Generated
தனுசு
- தனுசு ராசிக்காரர்கள் சாகசம், பயணம் மற்றும் புதிய அனுபவங்களை விரும்புபவர்கள்.
- இவர்களுக்கு பணத்தை சேமிப்பதை விட, அந்த பணத்தைக் கொண்டு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கும்.
- ஒரு சாகசப் பயணம் மேற்கொள்ள வேண்டும் அல்லது நல்ல அனுபவம் கிடைக்கும் என்றால் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் செலவிடுவார்கள்.
- புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், நீண்ட தூர பயணங்கள், தத்துவம் சார்ந்த புத்தகங்கள், படிப்புகள் என பணத்தை தண்ணீர் போல செலவிடுவார்கள்.
- இவர்களுக்கு பணம் என்பது அனுபவத்தைப் பெறுவதற்கான கருவி மட்டுமே.
- பணம் கையில் இருந்தால் நாளையைப் பற்றி யோசிக்காமல், அந்த நிமிடத்திலேயே செலவு செய்து விட வேண்டும் என்கிற உந்துதல் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
47
Image Credit :
AI Generated
மீனம்
- மீன ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.
- இவர்களின் மென்மையான குணம் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டவும், அவர்களுக்காக செலவு செய்யவும் தூண்டுகிறது.
- இவர்கள் தன் பாக்கெட்டில் இருக்கும் கடைசி பணத்தை கூட கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கு கொடுத்து விடுவார்கள்.
- பெரும்பாலும் தமக்காக செலவு செய்வதை விட ஏழைகளுக்கு தானம் அளிப்பது, நண்பர்களுக்கு உதவுவது அல்லது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்ற உணர்வுபூர்வமான தேவைகளுக்காக செலவழிப்பார்கள்.
- மற்றவர்கள் மீதான பரிவு, நிதி விஷயங்களில் அக்கறையின்மை ஆகியவற்றின் காரணமாக இவர்களின் சேமிப்பு வேகமாக கரைந்து போகிறது.
57
Image Credit :
AI Generated
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் தனித்துவமானவர்கள். புதுமையை விரும்புபவர்கள்.
- இவர்கள் புதிய தொழில்நுட்பங்கள், நவீன கண்டுபிடிப்புகள், புதிய யோசனைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.
- சந்தையில் ஒரு புதிய மின்னணு சாதனம் அல்லது கேஜெட் அறிமுகமானால் அதை உடனே வாங்கி விட வேண்டும் என்ற மனநிலை கொண்டிருப்பார்கள்.
- மேலும் சமூக நலன் சார்ந்த விஷயங்கள், நண்பர்களுக்கான செலவுகள், புதிய மற்றும் விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது பணத்தை முதலீடு செய்வார்கள்.
- நிதி விஷயங்களில் அதிக அலட்சியம் மற்றும் பெரிய லாபத்தை எதிர்பார்த்து புதுமையான மற்றும் ஆபத்தான திட்டங்களில் முதலீடு செய்வது இவர்களின் பணப் பழக்கங்களில் உள்ள குறைகளாக பார்க்கப்படுகிறது.
67
Image Credit :
AI Generated
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் எதிலும் விரைவான முடிவுகளை எடுப்பவர்கள்.
- இவர்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்.
- இதனால் திடீரென ஒரு பொருளை வாங்குவது அல்லது பொழுதுபோக்கிற்காக பணத்தை செலவிடுவது என இவர்களின் செலவு பழக்கம் நிலையற்ற தன்மையுடன் விளங்கும்.
- புதிய அனுபவங்களை அறிந்து கொள்வது, தங்களின் ஆர்வத்தை தூண்டும் பொருட்களை வாங்குவது, நண்பர்கள் கூட்டங்களில் தாராளமாக செலவழிப்பது இவர்களின் இயல்பாக இருக்கும்.
- ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர் ஆழமாக யோசிக்காமல் உந்துதலின் பேரில் செலவு செய்வது இவர்களின் கையில் பணம் தங்காமல் போவதற்கான முக்கிய காரணமாகும்.
77
Image Credit :
AI Generated
இது ஒரு வழிகாட்டி மட்டுமே
ஜோதிடம் என்பது ஒரு பொதுவான வழிகாட்டியாகும். இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவு செய்பவர்களாக இருந்தாலும், தங்கள் உழைப்பால் அதிக சம்பாதிக்கும் ஆற்றலும், தாராள குணமும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் செலவு பழக்கங்களை கண்காணித்து ஒரு தெளிவான பட்ஜெட் அல்லது நிதி திட்டமிடலை பின்பற்றுவது எதிர்கால நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரிதும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)