Last Updated:May 13, 2026 3:57 PM IST
அதிகாலை வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், இயற்கையான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சுரைக்காய் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் அடிக்கடி உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து உடல் எடை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
இன்றைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் பலரும் இயற்கை உணவுகள் மற்றும் சத்தான பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், எளிதில் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றான சுரைக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் சத்தான உணவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுரைக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் உடல்நலம் மேம்படுவதோடு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
சுரைக்காயில் அதிகளவில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. கோடைக்காலங்களில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன், உடல் சூட்டை குறைத்து சோர்வையும் நீக்குகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சுரைக்காய் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் குறைந்து, உடல் எடை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
அதிகாலை வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், இயற்கையான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. எனினும், ஜூஸ் தயாரிக்கும் முன் சுரைக்காய் கசப்பாக உள்ளதா என்பதை சுவைத்து பார்த்து பயன்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சாதாரணமாக சமையலில் பயன்படுத்தப்படும் சுரைக்காய், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சிறந்த இயற்கை உணவாக இருப்பதால், அதை சரியான முறையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அப்டேட்!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
.png)






English (US) ·