CSK: காத்திருக்கும் ரன் ரேட் சவால்; Playoffs சுற்றுக்குத் தகுதி பெறுமா சென்னை அணி?

54 minutes ago 8

11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ள சென்னை அணி, 12 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

Published:Just NowUpdated:Just Now

CSK - Play Off

CSK - Play Off

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

சிஎஸ்கே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா?

இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ள சென்னை அணி, 12 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

CSK - Play Off

CSK - Play Off

சஞ்சு சாம்சனின் அதிரடி

தொடரின் ஆரம்பக் கட்டத்தில் சற்று தடுமாற்றத்தைச் சந்தித்தாலும், தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் அதிரடி சதங்கள் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சீரான ஃபார்ம் ஆகியவை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து போன்றவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்துள்ளன.

16 புள்ளிகளை எட்டுமா சிஎஸ்கே?

தவிர ஜேமி ஓவர்டன் மற்றும் கார்த்திக் சர்மா, உர்வீல் படேல் ஆகியோர் சமீப போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தனர். தற்போதைய சூழலில், சென்னை அணி தனது ப்ளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளை எட்ட வேண்டும்.

CSK - Play Off

CSK - Play Off

கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டிகள்

அப்படிச் செய்தால் மற்ற அணிகளின் முடிவுகளையும் ரன் ரேட்டையும் பொறுத்து 90 சதவீத வாய்ப்பு உறுதியாகும். ஆனால், எந்தவிதமான கணக்கீடுகளுமின்றி நேரடியாகத் தகுதி பெற வேண்டுமானால், லக்னோ, ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

காத்திருக்கும் ரன் ரேட் சவால்

இதில் சவாலான விஷயம் என்னவென்றால், சென்னை அணியின் ரன் ரேட் தற்சமயம் ராஜஸ்தான் அணியை விட அதிகமாக இருந்தாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளது.

எனவே, புள்ளிகள் சமமாகும் பட்சத்தில் ரன் ரேட் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், வரும் போட்டிகளில் வெறும் வெற்றியை மட்டும் குறிவைக்காமல் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே இருக்கிறது.

CSK - Play Off

CSK - Play Off

மேஜிக்கை நிகழ்த்துமா சிஎஸ்கே?

லக்னோ மற்றும் மும்பை போன்ற பலமான அணிகள் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், சென்னை அணி தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த மேஜிக் 16 புள்ளிகளைத் தாண்டி முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறுமா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் ஆவலோடு காத்திருக்கிறது.

Read Entire Article