Tamil
இனி டோல் பிளாசாவுக்கு நேரில் செல்லாமல், உங்கள் மொபைல் போன் மூலமாகவே டிஜிட்டல் லோக்கல் பாஸ் பெறலாம். இந்த புதிய வசதியை NHAI அறிமுகப்படுத்தியுள்ளது.
business Jul 22 2026
Author: Raghupati R Image Credits:X
Tamil
யாருக்கெல்லாம் இந்த வசதி கிடைக்கும்?
டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள், இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் பெற தகுதியானவர்கள்.
Image credits: iSTOCK
Tamil
ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலம் விண்ணப்பம்
ராஜ்மார்க் யாத்ரா மொபைல் ஆப்பில் உள்ள 'லோக்கல் பாஸ்' என்ற புதிய வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.
Image credits: iSTOCK
Tamil
ஒரு மாதம் அன்லிமிடெட் பயணம்
இந்த லோக்கல் பாஸ் கிடைத்தால், சம்பந்தப்பட்ட டோல் பிளாசா வழியாக ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
Image credits: FREEPIK
Tamil
டோல் பிளாசா செல்லத் தேவையில்லை
முன்பெல்லாம் இந்த பாஸ் வாங்க, டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இனி எல்லா நடைமுறைகளும் ஆன்லைனில்தான்.
Image credits: iSTOCK
Tamil
டிஜிலாக்கர், வாஹன் தளங்களுடன் இணைப்பு
இந்த புதிய அமைப்பு டிஜிலாக்கர் மற்றும் வாஹன் தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன விவரங்கள் மற்றும் ஃபாஸ்டேக் தகவல்கள் தானாகவே சரிபார்க்கப்படும்.
Image credits: iSTOCK
Tamil
GIS மூலம் தகுதி சரிபார்ப்பு
விண்ணப்பதாரரின் வசிப்பிடம், டோல் பிளாசாவிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ளதா என்பது GIS தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்படும்.
Image credits: iSTOCK
Tamil
முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகம்
டெல்லியில் உள்ள அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-2-ல் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா டோல் பிளாசாவில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற டோல் பிளாசாக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
Image credits: X
Tamil
'மார்க் மித்ரா' உதவியும் உண்டு
ஃபாஸ்டேக், KYC, ரீஃபண்ட், லோக்கல் பாஸ், வருடாந்திர பாஸ் தொடர்பான சேவைகளுக்கும், புகார்களை அளிக்கவும் 'மார்க் மித்ரா' அமைப்பு உதவும்.
Image credits: iSTOCK
Tamil
நெடுஞ்சாலைப் பயணம் இனி எளிதாகும்
டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், டோல் நடைமுறைகளை விரைவுபடுத்தி, தேசிய நெடுஞ்சாலைப் பயணத்தை இன்னும் எளிதாக்குவதே NHAI-யின் நோக்கம்.
Image credits: FREEPIK
.png)
13 hours ago
13








English (US) ·