எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.
Published:Just NowUpdated:Just Now

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.
எப்ஸ்டீன் - ட்ரம்ப்
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகி இருந்தன.
இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பேட்டி ஒன்றில் பில் கேட்ஸ் பேசியிருக்கிறார்.
"எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதையும், எனது அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளை அந்தச் சந்திப்புக்கு அழைத்துச் சென்றதும் நான் செய்த மிகப்பெரிய தவறு.

பில் கேட்ஸ்
இது நன்கொடை அமைப்பிற்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்ஸ்டீனுடன் சேர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அவருடன் சுற்றியிருந்த பெண்களுடன் நான் நேரம் செலவிடவில்லை" என்று கூறியிருக்கிறார்.
.png)





English (US) ·