தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது 22.12.2025 முதல் 26.12.2025 வரையிலான ஒரு வாரத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வாராந்திரப் பயிற்சி அட்டவணை
(டிசம்பர் 22 - 26): இந்த வாரப் பயிற்சியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் (RRB-NTPC) தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் I மற்றும் II முதன்மைத் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
திங்கள் (22.12.2025): ரயில்வே தேர்விற்கான பாலிட்டி (Polity), கணிதம் (Algebra), டிஎன்பிஎஸ்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் விவாதம் ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறும்.
செவ்வாய் (23.12.2025): புவியியல், கணிதம் மற்றும் 2025 அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் குறித்துப் பயிற்சிகள் வழங்கப்படும்.
புதன் (24.12.2025): புவியியல் மற்றும் கணிதத்துடன், சுற்றுலா மற்றும் பயணத்துறை சார்ந்த படிப்புகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் இடம்பெறும்.
வியாழன் (25.12.2025): புவியியல், கணிதம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகளின் இரண்டாம் பகுதி கற்பிக்கப்படும்.
வெள்ளி (26.12.2025): வாரத்தின் இறுதி நாளில் புவியியல், கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பணித்திறன் வழிகாட்டி (Mail Merge) வகுப்பும் நடைபெறும்.
.png)
2 hours ago
8






English (US) ·