Last Updated:Feb 26, 2026 3:30 PM IST
Iftar Snack| வெளியே கிரிஸ்பியாகவும், உள்ளே ஜூசியான சிக்கன்–உருளைக்கிழங்கு கலவையுடன் கையில் பிடித்து சாப்பிட சுவையாக இருக்கும் லெக் பீஸ் லாலிபாப். இப்தார் நேரத்துக்கு ஸ்பெஷல் ஸ்நாக்.

இப்தார் நேரத்துக்கு ஏதாவது செம மாஸ் ஐட்டம் பண்ணணும்னு யோசிக்கிறீங்களா? சாதாரண பஜ்ஜி, சமோசா எல்லாம் ஓவர் ஆயிடுச்சு! இந்த ரமலானுக்கு கொஞ்சம் ஸ்டைலாக, கையில் பிடிச்சுக்கிட்டு சாப்பிடலாம் மாதிரி சூப்பரான லெக் பீஸ் சிக்கன் லாலிபாப் பண்ணி பாருங்க… வெளியே கிரிஸ்பி, உள்ளே ஜூசியா இருக்கும். இத மட்டும் உங்க வீட்டில செஞ்சீங்கன்னா இன்னும் இருக்கா இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க.
இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால், லெக் பீஸ் உள்ள சிக்கன் ஒரு கிலோ, மிளகு, சிக்கன் பொடி, பட்டை, மஞ்சத்தூள், உருளைக்கிழங்கு அரை கிலோ, முட்டை இரண்டு, மிளகுத்தூள், கறி மசாலா, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பிரட் கிரம்ஸ் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் லெக் பீஸ் கொண்ட சிக்கனை நன்றாக கழுவி பிறகு ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு, சிக்கன், பட்டை, மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். அதன் பிறகு சிக்கனில் உள்ள சதைகளை நீக்கி மிகவும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் உருளைக்கிழங்கை நன்றாக மசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிக்கன் சதைகளை நீக்கிய பிறகு அதில் உள்ள எலும்பு துண்டுகளை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கியல் சிக்கன் துண்டு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், சிக்கன் பொடி, கறி மசாலா, கான்பிளார் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பிசைந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனை நன்றாக கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கியல் சிக்கன் துண்டு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், சிக்கன் பொடி, கறி மசாலா, கான்பிளார் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பிசைந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனை நன்றாக கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்பொழுது ஊற வைத்துள்ள சிக்கனை கையில் எடுத்து நன்றாக ஒரு பந்து போல உருட்டி அதில் சிறிதளவு சீஸ் சேர்த்து அதன் மேல் எலும்பு துண்டை வைத்து ஒரு லாலிபாப் போல் நன்றாக உருட்டிக் கொள்ள வேண்டும். இறுதியாக செய்து வைத்துள்ள லாலிபாப் தொண்டை எடுத்து முட்டையில் டிப் செய்து பிறகு பிரட் கிரம்ஸில் டிப் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் ரமலான் நோன்புக்கான லெக் பீஸ் லாலிபப் ரெடியாகிவிடும்.

தமிழ்நாட்டில் (27.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... ஏரியா லிஸ்ட்..
தமிழ்நாட்டில் 27.02.2026 பல மாவட்டங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிப்பு
கோவை, திருப்பூர், தேனி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி பகுதிகளில் மின்தடை
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
.png)






English (US) ·