விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எப்போது? வெளியான தகவல

2 hours ago 16

Last Updated:Feb 26, 2026 4:57 PM IST

விஜய் அடுத்த மக்கள் சந்திப்பு தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.

தவெக விஜய்
தவெக விஜய்

தவெக தலைவர் விஜய், கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு, தனது மக்கள் சந்திப்பு பயணங்களை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தன் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார்.

இதில், பங்கேற்பவர்களுக்கு பாஸ் உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 23ஆம் தேதி வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா, கொல்லமங்கலம் பகுதியில் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.

இதற்கு முன்னதாக சேலத்தில் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகிய நிலையில், முதல் முறையாக வேலூர் கூட்டத்தில் மேற்கூரை அமைத்து கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில், மார்ச் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளையும் மக்களையும் சந்திக்க உள்ளார். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு விரைவில் தவெக நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் 3 மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த தவெக திட்டமிட்டு இருப்பதாக தகவல். டெல்டா மாவட்டத்தை தொடர்ந்து அடுத்து தென் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article