Jana Nayagan OTT | விஜயின் ‘ஜனநாயகன்’ எப்போது ஓடிடியில் ரிலீஸ்… எந்த தளத்தில் பார்க்கலாம்..? 

1 hour ago 6

Last Updated:Jul 24, 2026 8:05 PM IST

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது.. எந்த ஓடிடியில் வெளியாகும்?

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படம் பல சிக்கல்களை கடந்து ரிலீஸானது. ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர். தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் முதல் நாளான நேற்று உலக அளவில் ரூ.78 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வார இறுதி என்பதால் அடுத்தடுத்து படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என தெரிகிறது. படத்தை பார்த்த தமிழக அமைச்சர்கள் விஜயின் கடைசி படம் என்பதால் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், இந்தப் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதன்படி, முதலில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனத்துக்கு 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், படம் வெளியாவதில் இருந்த சிக்கல், காலதாமதம் காரணமாக அந்த ஒப்பந்தத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற ஜீ5 ஓடிடி நிறுவனமே டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ரூ.50 கோடிக்கு ஜீ5 ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளதாம். இதனால் படக்குழுவுக்கு ரூ.60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கல்வித் தகுதி; மாணவர் அமைப்பில் தொடங்கிய அரசியல் வாழ்க்கை

  • நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தல்

  • கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம்.

  • அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article