Jana Nayagan | குழந்தைகளுடன் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த அமைச்சரால் சர்ச்சை! 

15 hours ago 10

Last Updated:Jul 23, 2026 9:37 PM IST

“A” சான்றிதழ் பெற்ற வயது வந்தோருக்கான ‘ஜனநாயகன்’ படத்தை தனது குழந்தைகளுடன் தமிழக அமைச்சர் பார்த்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

“A” சான்றிதழ் பெற்ற வயது வந்தோருக்கான ‘ஜனநாயகன்’ படத்தை தனது குழந்தைகளுடன் தமிழக அமைச்சர் பார்த்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. முதல்வர் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறிய நிலையில், அவரது கடைசி படத்தை பார்த்த அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகரில் உள்ள மூன்று திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்டது. திருவாடானை சட்டமன்ற தொகுதியில் வென்ற தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ராஜீவ் தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக உள்ளார்.

அவர் தனது குடும்பத்துடன் இன்று மாலை 4 மணியளவில் ராமநாதபுரத்தில் தனது குழந்தைகள், மனைவி மற்றும் உறவினர்களுடன் திரையரங்கில் படம் பார்த்தார். சென்சார் போர்டு திரைப்படத்தை குழந்தைகள் காண அனுமதி இல்லை எனக் கூறியிருந்த நிலையில் தனது குழந்தையுடன் அமைச்சர் வந்ததால் பரபரப்பு நிலவியது. மேலும், அமைச்சரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article