Last Updated:Jul 22, 2026 5:44 PM IST
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

News18
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி, தவெக நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தேர்தலுக்கு முன்பு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் வெளியீடு தாமதமானது. பின்னர் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், படத்திற்கு தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் குஷி மோகன் தலைமையில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூவரசன்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அப்போது, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்களை கையில் ஏந்திய தவெக நிர்வாகிகள், அவற்றை கோவில் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Viluppuram,Viluppuram,Tamil Nadu
Jananayagan Release: 'ஜனநாயகன்' வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை... விஜய் ரசிகர்கள் பரபரப்பு வழிபாடு
.png)







English (US) ·