Last Updated:Jul 22, 2026 6:36 PM IST
குறைந்த விலையில் ட்ரோன் கேமரா விற்பதாக வந்த விளம்பரத்தை நம்பி, அந்த லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்துள்ளார்.

ஓசூரில் இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வெறும் தண்ணீர் பாட்டில்கள் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வந்த ஒரு தமிழ் விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அப்போது, குறைந்த விலையில் ட்ரோன் கேமரா விற்பதாக வந்த விளம்பரத்தை நம்பி, அந்த லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஆர்டரை உறுதி செய்ய வெறும் 200 ரூபாய் மட்டும் அட்வான்ஸ் தொகையாகச் செலுத்துமாறும், மீதித் தொகையை 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் பொருள் கைக்கு வந்ததும் செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதைத் துளியும் சந்தேகிக்காத பிரகாஷ், 200 ரூபாயை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து வீடு தேடி வந்த பார்சலைப் பெற்றுக் கொண்ட அவர், மீதமுள்ள தொகையைச் சேர்த்து, மொத்தம் 2 ஆயிரத்து 200 ரூபாய் செலுத்தியுள்ளார். பொதுவாகப் புதிய பொருட்களை ஆன்லைனில் வாங்கினால் அதைத் திறக்கும்போது செல்போனில் வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்ட பிரகாஷ், அதேபோல ஆசையாக வந்த ட்ரோன் பார்சலையும் வீடியோ எடுத்தபடியே பிரித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம்.. போலீசில் சிக்கிய கணவன் எழுதிய கடிதம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!
கவனமாக பேக் செய்யப்பட்டிருந்த அந்தப் பெட்டிக்குள் நிறைய காகிதங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதனை விலக்கிப் பார்த்த பிரகாஷுக்கு ஒருகட்டத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ட்ரோனுக்குப் பதிலாக, வெறும் இரண்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே பார்சலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. திட்டமிட்டு விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் தெரிவிக்கையில், தனக்கு ஏற்பட்ட இழப்பு 2 ஆயிரத்து 200 மட்டுமே. இது சிறிய தொகையாக இருக்கலாம்.
ஆனால், தன்னைப் போலவே பலரும் அதிக விலை கொண்ட பொருட்களை ஆர்டர் செய்து பெரிய தொகையை இழக்க வாய்ப்புள்ளதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார். இன்ஸ்டா விளம்பரங்களை நம்பி ஆன்லைன் ஆர்டர் செய்யும் மக்களை ஏமாற்ற பெரிய கும்பலே காத்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆன்லைனில் ஆர்டர் செய்வோரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ட்ரோன் ஆர்டர் செய்த இளைஞர்.. பார்சலை வாங்கி பிரித்தபோது ஷாக்.. என்ன நடந்தது?
.png)








English (US) ·