Karuppu Movie Review | சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு..? முழு திரைவிமர்சனம் இதோ!

1 hour ago 15

Last Updated:May 15, 2026 4:32 PM IST

Karuppu Movie Review | சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அந்த படம் எப்படி இருக்கிறது என்பதை குறித்து பார்க்கலாம்.

 சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அந்த படம் எப்படி இருக்கிறது என்பதை குறித்து பார்க்கலாம். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி நடராஜன் உள்ளிட்டோர் கருப்பு திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

 கேரளாவில் இருந்து தன்னுடைய மகளின் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக வரும் தந்தையிடம் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த நகையை இருவர் கொள்ளையடிக்கின்றனர். அந்த நகை இருந்தால்தான், தன் மகள் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் காவல்துறையில் மன்றாடுகிறார். ஒரு வழியாக நகை கிடைகிறது.

 ஆனால் அவர் கைக்கு வரவில்லை. கோர்டுக்கு சென்று வாங்க வேண்டும் என்ற சூழல் வர கோர்ட்டுக்கு செல்கிறார். ஆனால் அங்கு வழக்கறிஞரும் நீதிபதியும் பெரும் மாஃபியாவாக இருக்கிறார்கள். அந்த தந்தை நகையை மீட்டாரா? மகளை காப்பாற்றினாரா? அவருக்கு உதவியது யார்? அதில் சூர்யாவின் பங்கு என்ன என்பதே கருப்பு!.

 ஒரு சென்டிமென்ட் கதைக்குள் கடவுளைக் கொண்டு வந்து, அதை பக்காவான கமர்சியல் திரைப்படமாக எடுக்க ஆர்.ஜி.பாலாஜி முயற்சித்து இருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சாமி படங்களில் வரும் கடவுள்கள், கெட்டவர்களை துரத்தி துரத்தி பழி வாங்கும். ஆனால் இந்தத் திரைப்படத்தில் கருப்பு சாமியாக வரும் சூர்யா கதாபாத்திரம் அதிலிருந்து மாறுபட்டுள்ளது. அதுவே படத்திற்கு சுவாரஸ்யத்தையும் கூட்டி இருக்கிறது.

 முதல் பாதியில் சுமார் 25 நிமிடங்கள் கழித்துதான் சூர்யா கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அதுவரை படத்தின் கதையை செட் செய்ய திரைக்கதையை வடிவமைத்திருக்கின்றனர். சூர்யா படத்தில் என்ட்ரியான பிறகு காட்சிகளில் சின்ன சின்ன ஹியூமர், அதிரடிகள், மாஸ் எலிவேஷன் என படம் நகர்கிறது. அந்தக் காட்சிகள் ரசிகர்களை கவரவும் செய்துள்ளன. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி சந்திக்கும் காட்சிக்கு விசில் சத்தம் தூள் பறக்கிறது.

 முதல் பாதியிலேயே சூர்யா யார் என்று தெரிந்துவிட்டாலும், இராண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அதேபோல் சின்ன சின்ன வசனங்களை காமெடி பஞ்சாக பயன்படுத்தி சிரிக்க வைத்துள்ளார். சூர்யா கருப்புசாமி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். அதைப்போல் காட்சிகளை மீறிய நடிப்பு இல்லாமல் முடிந்த அளவுக்கு எதார்த்தத்துடன் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடித்துள்ளார். அதேபோல் த்ரிஷா கதாபாத்திரம் கமர்ஷியல் படங்களில் வழக்கமாக வரும் சப்போட்டிங் ரோல் போல்தான் என்றாலும், அதைக் கச்சிதமாக செய்துகொடுத்து ஸ்கோர் செய்கிறார்.

 ஒளிப்பதிவை பொறுத்தவரை ஜி.கே. விஷ்ணுவின் காட்சிகள் படத்தை மாஸாக காட்டுகின்றன. அதுவும் கருப்பு சாமியாக சூர்யா வரும் காட்சிகளை அட்டகாசமாக படமாக்கி உள்ளார். இசையைப் பொறுத்தவரை பாடல்கள் மிக மோசமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் படத்துடன் ஒன்றவில்லை. காட்சி ஒன்றாகவும், இசை ஒன்றாகவும் இருக்கிறது. இந்த படத்தில் மிக மோசமான ஒரு விஷயமாக இசை பிரிவு அமைந்துள்ளது. அதேபோல் ஒலிப்பதிவும் சரியாக அமையவில்லை. இசையும், சவுண்ட் மிக்சிங் ஒலிப்பதிவும் சரியாக இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் பக்காவாக இருந்திருக்கும்.

 இந்தப் படத்தில் ஆர்.ஜே.சூர்யா வழக்கறிஞராகவும், நட்டி நடராஜன் நீதிபதியாகவும் நடித்தள்ளனர். அவர்கள் இருவரும் சிண்டிகேட் அமைத்து பணம் வசூலிக்க மக்களை ஏமாற்றும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதுவும் வழக்கறிஞர்கள் கூட்டு சேர்ந்து ரவுடிசம், ஏமாற்று வேலை, பொய் சொல்வது என பலவற்றை செய்வதுபோல் காட்சிகள் உள்ளன. இது வழக்கறிஞர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தலாம். ஒரு சென்டிமென்ட் கதையில், சமூக பார்வை, கடவுள் நம்பிக்கை என ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை கையாண்டு, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் கருப்பு படம் சூர்யாவுக்கு வேட்டை சாமியாக அமைந்திருக்கிறது.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முக்கிய தகவல்!

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?

  • தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

  • மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.

  • தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article