Last Updated:May 15, 2026 5:31 PM IST
மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை சுமார் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடையும் 60 வயதுக்கும் மேற்பட்ட பெண்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலையொட்டி, தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதால் கால அவகாசம் தேவை என முதலமைச்சர் ஜோசப் விஜய் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சூழலில் மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை சுமார் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு சமூக நல திட்டங்களின் கீழ் உதவி தொகை பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்டறியும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இதன்மூலம், 60 வயதுக்கும் மேற்பட்ட மகளிருக்கு கூடுதலாக பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயரை மதிப்புமிகு மகளிர் திட்டம் என பெயர் மாற்றவும் தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?
தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.
தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.
.png)





English (US) ·