Karuppu | சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கு சிறப்பு காட்சிகள்… தமிழக அரசு அனுமதி!

1 hour ago 10

Last Updated:May 12, 2026 5:19 PM IST

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்துக்கு 2 நாட்கள் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

கருப்பு
கருப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்துக்கு 2 நாட்கள் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “கருப்பு திரைப்படத்துக்கு 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று படக்குழு அரசை கேட்டுக்கொண்டது. அதன்படி வரும் 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களுக்கு ஒரு சிறப்பு காட்சியினை காலை 9 மணி தொடங்கி இரவு 2 மணி வரை (ஒரு நாளைக்கு 5 நாட்கள் மட்டும்) திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், சுவாசிகா, நட்டி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article