Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம் வாசிப்பு

2 hours ago 13

தொடக்க நாளில், கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு உள்ளிட்ட பல துயரமான சம்பவங்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்திருக்கிறார்.

Published:Just NowUpdated:Just Now

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று (அக்டோபர் 13) அறிவித்திருந்தார்.

அந்தவகையில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடியிருக்கிறது. தொடக்க நாளில், கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு உள்ளிட்ட பல துயரமான சம்பவங்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்திருக்கிறார்.

சட்டசபை

சட்டசபை

துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக, சட்டசபையில் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய எதிர்க்கட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை மையமாகக் கொண்டு அரசு மீதான கேள்விகளை எழுப்பவிருக்கின்றன.

அதோடு, கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறைபாடுகள், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகள் ஆகியவை குறித்தும் தீவிர விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளன.

Read Entire Article