Last Updated:October 14, 2025 12:56 PM IST
தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை போக்குவரத்து ஆணையர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், ஊருக்கு செல்பவர்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பல தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளை நடந்து வருவதால் அமைச்சர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். மேலும், 14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து ஆணையர் அனைத்து சரக இணை போக்குவரத்து ஆணையாளர்கள் துணை போக்குவரத்து ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடியில் தனி வழி (Separate Bay) அமைக்க சுங்க சாவடி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தினை உறுதிசெய்ய தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்க சாவடிகளில் பணியமர்த்தி அரசு பேருந்துகள் விரைவாக சுங்கசாவடியை கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள். பணியின் போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து, குறைபாடுடைய வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் திவாகவோ புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 12:56 PM IST