Ketu Chandra Conjunction in Leo Unlucky Zodiac Signs: சிம்ம ராசியில் கேது சந்திரன் சேர்க்கை நடைபெறுவதால் நான்கு ராசிக்காரர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
2 Min read
Published : May 12 2026, 11:19 AM IST
16

Image Credit : Asianet News
Ketu Chandra Conjunction in Leo Unlucky Zodiac Signs
வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. ஜோதிடத்தின் படி ராகு மற்றும் கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றனர். ராகு கேதுவின் மாற்றம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கக்கூடும். அந்த வகையில் மே 22ஆம் தேதி சிம்ம ராசியில் கேது பகவான் மற்றும் சந்திர பகவான் இருவரும் இணைந்து பயணிக்க உள்ளனர். இதன் காரணமாக கிரகணயோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு அசுப பலன்களை வழங்கலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source
26
Image Credit : Asianet News
சிம்மம்
இந்த கிரகண யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் சிம்ம ராசிக்காரர்கள் மே 22ஆம் தேதி தொடங்கி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் சிக்கல்கள், எதிர்பாராத நிதி இழப்புகள் உருவாகக்கூடும். தைரியம், தன்னம்பிக்கை குறையக்கூடும். பணியிடங்களில் தேவையில்லாத பிரச்சனைகள், வாக்குவாதங்கள் எழலாம். தம்பதிகளிடையே மனக்கசப்புகள் உருவாகலாம். சேமிப்பு குறையத் தொடங்குவதால் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். மே 22 தொடங்கி அடுத்த சில தினங்களுக்கு சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. பொறுமையுடன் இந்த காலக்கட்டத்தை கடக்க வேண்டியது அவசியம்.
36
Image Credit : Asianet News
விருச்சிகம்
கேது மற்றும் சந்திரனால் உருவாகும் ‘கிரகண யோகம்’ காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக எதிரிகள் சதி செய்யக்கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு திடீரென வேலை பறிபோகும் வாய்ப்புகளும் உண்டு. பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். திடீர் செலவுகள், மருத்துவச் செலவுகள் காரணமாக உங்கள் சேமிப்பு குறையும். தொழிலில் எதிரிகள் மற்றும் சதிகாரர்களின் ஆட்டம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுக்க வேண்டியது அவசியம்.
46
Image Credit : Asianet News
மகரம்
கேது மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் ‘கிரகண யோகம்’ காரணமாக மகர ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். தொழில் சார்ந்த விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண பரிவர்த்தனைகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. அவசர முடிவுகள் பெரும் இழப்புகளை தரும். பங்குச் சந்தையில் இழப்பீடுகளை சந்திக்க நேரிடலாம். உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நல பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கலாம். திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளுக்காக அதிக பணம் செலவிடும் வாய்ப்புகளும் உருவாகலாம்.
56
Image Credit : Asianet News
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நிதி மற்றும் வேலை விஷயத்தில் கடும் சவால்கள் ஏற்படும். குடும்பத்தினர் இடையே சண்டை, சச்சரவுகள், தகராறுகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படலாம். கூட்டாளிகள் உங்களை விட்டு பிரிந்து தனியாக தொழில் தொடங்கக்கூடும். போட்டி, பொறாமை அதிகரிக்கும். முதலீடுகள் செய்வதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். தேவையில்லாத பிரச்சனைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். இந்த காலகட்டத்தை பொறுமையுடனும் அமைதியுடனும் கையாள வேண்டியது அவசியம்.
66
Image Credit : Asianet News
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
.png)
19 hours ago
16








English (US) ·