Last Updated:May 13, 2026 6:42 AM IST
தெற்கு வங்கக்கடல் பகுதி, அந்தமானம் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதி, அந்தமானம் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
.png)

English (US) ·