Last Updated:Feb 21, 2026 12:58 PM IST
45 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, கமல் இணையும் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

45 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இரு பெரும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். ‘மல்டி ஸ்டார்’, ‘பான் இந்தியா’ டிரெண்டிங் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் கமல்ஹாசனும், ரஜினியும் இணைந்து நடிப்பது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினியை பொறுத்தவரை அவர், நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தை முடித்துவிட்டு கமலுடன் நடிக்கிறார் ரஜினி. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புல்லரிக்கும் காட்சிகளுடன் இருப்பதாக ரசிகர்கள் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
ரஜினி - கமல் இணையும் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை பொறுத்தவரை, அதன் தொடக்கத்திலேயே நெல்சன் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்கு பின்னால் இரண்டு ‘மாஸ்டர் பீஸ்’ படங்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று ‘காட் ஃபாதர்’! அல்ஃபசினோ நடித்த இந்தப் படம் கேங்க்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் தழுவலாக கமலின் ‘நாயகன்’ படத்தை உருவாக்கியிருப்பார் மணிரத்னம்.
மறுபுறம் ராபர்ட் டி நீரோவின் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் அமெரிக்கா’. இதுவும் உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கல்ட் க்ளாசிக். முதல் படம் கமலையும், இரண்டாவது படம் ரஜினியையும் குறிக்கிறது. முழுக்க முழுக்க 70ஸ், 80ஸ் கெட்டப்புகளின் உடைகளை இருவரும் அணிந்து வருகின்றனர். படம் பீரியட் ட்ராமாவாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.
காரணம், 70, 80களில் உடை அலங்கார ஸ்டைல் பார்ப்பவர்களை கூடுதலாக ரசிக்க வைக்கும் தன்மை கொண்டது. உதாரணமாக பழங்கால கை கடிகாரங்கள் கோடி கணக்கில் விலைக்கு விற்கப்படுபவை. காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக். ஆகவே கமல் - ரஜினி இணையும் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் லுக்கில் கொண்டுபோக நெல்சன் இந்த காலக்கட்டத்தை தேர்வு செய்திருப்பதாக தோன்றுகிறது.
இந்தப் படத்தில் யார் ஹீரோ? என கமல் கேட்கும் இறுதி காட்சி கவனம் பெறுகிறது. இரு பெரும் ஸ்டார்கள் ஒன்றிணையும்போது அவர்களை எதிரெதிர் திசையில் நிறுத்துவது கதையில் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும். க்ளிம்ஸ் வீடியோவிலேயே இருவரும் முரண்பட்டு இருப்பதை காண முடிகிறது. எனவே இரண்டு முரண்பட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் நடப்பதால், இருவரும் நிச்சயம் நண்பர்களாக இருக்க வாய்ப்பில்லை. இருவருமே எதிர்மறை கதாபாத்திரங்களாகவே இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வன்முறை காட்சிகள் எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. முன்னதாக லோகேஷ் கனகராஜ் கொண்டு சென்ற ஸ்கிரிப்டை பார்த்த ரஜினி - கமல் வன்முறை தவிர்த்த கதையை விரும்புவதாக கூறியிருந்தனர். ஆகவே இந்தப் படம் ஜாலியான, ஸ்டைலிஷ் மேக்கிங் உடன் கூடிய புதிய கதைகளத்தில் இருக்கும் என தெரிகிறது. படத்தின் மேலும் சில பான் இந்தியா ஸ்டார் நடிகர்கள் சேரும்பட்சத்தில் தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலுக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.

GK | உலகின் மிக பழமையான மொழி எது தெரியுமா?
மொழிகள் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்டவை உலகின் மிக பழமையான மொழிகளில் அடங்கும்.
தமிழ் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது,
.png)






English (US) ·