Last Updated:Feb 22, 2026 3:17 PM IST
பிரதமர் மோடி, ஜெயலலிதா சேவைகளை புகழ்ந்து, செயற்கை நுண்ணறிவு மாநாடு, அலின் ஷெரின் உடல் உறுப்பு தானம், மக்களுக்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலாலிதா என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, மக்களுக்காக வாழ்ந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கேரளாவில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரினின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது குறித்துப் பேசிய பிரதமர், உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த நினைவுகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். மக்களுக்காக வாழ்ந்த தலைவர் அம்மா ஜெயலலிதா என்று தெரிவித்தார். ஜெயலலிதா ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் இருக்கும் என்றும் பெண்கள் சக்தியின் வெளிப்பாடாக அவர் திகழ்ந்ததாகவும் கூறினார். தான் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போது, தமிழக மக்கள் ஜெயலலிதா மீது வைத்திருக்கும் அன்பை உணர்ந்ததாகவும், ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது மக்களிடம் ஒரு புத்துணர்வைப் பார்க்க முடிவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலாலிதா என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, மக்களுக்காக வாழ்ந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
Mann Ki Baat | மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
.png)



English (US) ·