ஈரானும் அமெரிக்காவும் விரைவில் உடன்பாட்டை எட்ட முயற்சி

1 hour ago 16

79d1ce9a-9cbb-48fe-a460-d9c5a64afdc2

அமெரிக்காவுக்கு எதிராக டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள பதாகையை வியாழக்கிழமை (பிப்ரவரி 19) கடந்துசென்ற ஈரானியப் பெண்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: டெஹ்ரானுக்கு எதிரான தடைகளை அகற்றுவதன் தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அதனைத் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையில் அடுத்த மாதத் (மார்ச்) தொடக்கத்தில் புதிய சுற்றுப் பேச்சுக்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

அணுத் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்கிறது அமெரிக்கா. ஆனால் டெஹ்ரான், அதன் அணுத்திட்டம் எரிசக்திக்காக என்கிறது. அதனால் இழுபறி நீடிக்கிறது.

“சமரசப் பேச்சு தொடர்கிறது, இடைக்கால உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது,” என்று அதிகாரி கூறினார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி, நகல் திட்டம் அடுத்த ஒருசில நாள்களில் தயாராகிவிடும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், குறிப்பிட்ட அளவுக்கு ராணுவத் தாக்குதல் நடத்துவதுபற்றிப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

டெஹ்ரான் அதன் எண்ணெய், கனிமவளங்களின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் கொடுக்காது என்று அதிகாரி கூறினார். ஈரானின் எண்ணெய், எரிவாயுத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் எப்போதும் பங்கெடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read Entire Article