Last Updated:Feb 07, 2026 11:41 AM IST
அண்மையில் ஓடிடியில் வெளியான இந்தப் படம் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் ஓடிடியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதியில் பார்ப்பதற்கு ஏற்ற படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்தப் படம் நீண்ட நாட்களுக்கு பிறகு, நட்சத்திர ஹீரோவுக்கு கம்பேக் கொடுத்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான படம் ‘சர்வம் மாயா’ (எல்லாம் மாயை). படத்தை அகில் சத்யன் இயக்கியிருந்தார். ரியா சிபு நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனால் படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இந்நிலையில் இந்தப் படம் அண்மையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மலையாள படமான இதை தமிழ் டப்பிங்கில் காணலாம். படத்தின் கதையைப் பொறுத்தவரை, கிடார் கலைஞரான பிரபேந்து (நிவின் பாலி) பண நெருக்கடி காரணமாக புரோகித உதவியாளராக பணிபுரிகிறார். அப்போது சிறுவன் ஒருவருக்கு பேய் ஓட்டும் பூஜைக்கு செல்லும் அவருடன் பெண் ஆவி ஒட்டிக்கொள்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.
இந்தப் படம் நகைச்சுவையான திகில் படமாக உருவாகியுள்ளது. திகில் காட்சிகள் பெரிய அளவில் இல்லை. அதற்கு பதிலாக ஜாலியான நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில சுவாரஸ்யமான சம்பவங்கள் ரசிக்க வைக்கின்றன. பெண் ஆவிக்கும் - நிவின் பாலிக்கும் இடையிலான உரையாடல்களும், காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன.
தொடக்கத்தில் மெதுவாக நகரும் படம், பெண் ஆவியின் வருகைக்கு பின் சூடுபிடிக்கிறது. ஆவியின் கடந்த காலத்தை சொல்லும் காட்சிகள், மர்ம கதை உள்ளிட்டவற்றில் மனித உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. சூப்பர் நேச்சூரல் ஜானர் படத்தை ஃபீல்குட்டாக முடித்தது மலையாள சினிமாவின் டச்.
நிவின் பாலிக்கு நல்லதொரு கம்பேக் திருப்படமாக ‘சர்வம் மாயா’ அமைந்துள்ளது. இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. வார இறுதியில் ஃபீல்குட் படங்கள் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் நல்ல தேர்வாக அமையலாம்.

இது எங்களுக்கு "கட்டுப்படி" ஆகாது... கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்
கறிக்கோழி விவசாயிகள் அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் என கோவையில் போராட்டம் நடத்தினர்
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை
விவசாயிகள் மனு அளிக்க காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் சமாதானம் ஏற்பட்டது
.png)






English (US) ·