OTT | மதுபாலா - இந்திரன்ஸ் நடித்த ‘சின்ன சின்ன ஆசை’ ஓடிடியில் எப்போது ரிலீஸ்..? வெளியான அறிவிப்பு

1 hour ago 6

Last Updated:Jul 22, 2026 8:49 PM IST

மதுபாலா - இந்திரன்ஸ் நடிப்பில் வெளியான ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சின்ன சின்ன ஆசை
சின்ன சின்ன ஆசை

மதுபாலா - இந்திரன்ஸ் நடிப்பில் வெளியான ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மதுபாலா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக பாராட்டு பெற்றவர் இந்திரன்ஸ். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ‘சின்ன சின்ன ஆசை’.

மலையாளத்தில் உருவான இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வர்ஷா வாசுதேவ் இந்தப் படத்தை எழுதி இயக்கினார். எதிர்பாராத விதமாக சந்திக்கும் இருவர் வாழ்வில் ஏற்படும் சம்பவங்கள், அவர்களுக்கு இடையிலான அன்பை பேசும் இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி வரும் ஜூலை 28-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article