Serial Update: டபுள் ஹீரோவா? நோ சொன்ன நடிகர் டு சமையல் நிகழ்ச்சி; கறார் காட்டும் சி.இ.ஓ!

1 hour ago 12

சின்னத்திரை ஏரியாவில் நடந்த சில லேட்டஸ்ட் அப்டேட் குறித்த செய்தி

Published:Just NowUpdated:Just Now

டிவி

டிவி

டபுள் ஹீரோவா, நோ!

தங்கை, தோழி முதலான சின்னச் சின்னக் கேரக்டர்களில் வந்து டிவி ஏரியாவில் பிரபலம் ஆகி ஹீரோயின் வரை உயர்ந்தவர்கள் நிறைய. 'மைனா' நந்தினி, தற்போது 'வீரா' சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி அருள்மொழி எனப் பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம்.

இந்த வரிசையில் சித்தி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்த தர்ஷனா ஸ்ரீபாலும் ஹீரோயினாக களம் இறங்குகிறார். விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் இவர். 'நீயின்றி நானில்லை' என டைட்டில் வைக்கப் பட்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

'தெய்வ மகள்', 'மாரி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் ஷப்னம் உள்ளிட்ட மேலும் சில ஆர்ட்டிஸ்டுகளும் கமிட் ஆகியிருக்கிறார்கள். அடுத்த சில தினங்களில் சீரியலின் புரொமோ ஷுட் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சன் டிவி பக்கம் வந்தால் 'ஆனந்த ராகம்' தொடர் முடிவடைந்து விட்டதால் அதில் நடித்து வந்த அனுஷா ஹெக்டேவுக்கு மீண்டும் ஒரு புதிய தொடரில் நடிக்க வாய்ப்பு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த தொடரில் ஹீரோவாக நடித்த அழகப்பனுமே மீண்டும் சன் டிவி சீரியலில் தான் கமிட் ஆகாலமெனத் தெரிகிறது. வேறொரு சேனலில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றுக்கு கேட்டிருக்கிறார்கள். மறுப்பு சொல்லி விட்டாராம் அவர். சன் டிவி தரப்பிலிருந்து காத்திருக்கச் சொலியிருப்பதாகத் தெரிகிறது.

கறார் காட்டும் சி.இ.ஓ.!

டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள், கிஃபட் கூப்பன்கள் வழங்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த மாதிரிதான் சமீபத்தில் முடிவடைந்த பிரபலமான‌ சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். கூப்பன் என்றால் ஆயிரம் இரண்டயிரம் மதிப்பு மிக்கதல்ல. அந்தக் கூப்பன் இருந்தால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான அந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் இலவசமாகத் தங்கலாம் உணவுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டலில் உள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மதிப்பு மிக்க கூப்பன் என்கிறார்கள். கூடுதலாக ஒருவரையும் கூட்டிச் செல்லலாம்.

இப்படிப் பட்ட கூப்பனை ஏனோ தெரியவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் ஹீரோயின் ஒருவரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் பயன்படுத்த விரும்பவில்லையாம்.

இன்னொரு சக போட்டியாளர் ஒருவரிடம் கூப்பனை தந்து பயன்படுத்தச் சொல்லி விட்டார்களாம். அந்த சக போட்டியாளார் ஹோட்டலுக்குப் பேசி வரலாமா எனக் கேட்டிருக்கிறார். 'எதுக்கும் நீங்க சி.இ.ஒ வை ஒரு வார்த்தை கேட்டுடுங்க' எனச் சொல்லியிருக்கிறார்கள்.

'இல்ல, இதை அனுமதிக்க முடியாது, யாருக்கு கொடுத்தாங்களோ அவங்கதான் வரணும்' எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் சி.இ.ஒ.

'கூப்பன் கையில இருக்கு, வேலிடிட்டி தேதியும் இருக்கு. ஆனாலும் பயன்படுத்த முடியாதுனு சொல்றாங்க. சி.இ.ஒ. நினைச்சா அனுமதிக்கலாம், ஆனா ஏன் மறுக்கிறார் தெரியலை' என நொந்து கொண்டாராம் அந்த போட்டியாளர்.

இதில் ஹைலைட் என்ன தெரியுமா, 'கூப்பனை அவங்கவங்கதான் கொண்டு வரணும்' என கறார் உத்தரவு போட்ட ஹோட்டலின் அந்த சி.இ ஒ மேற்படி நிகழ்ச்சியில் நடுவராக வந்தவரேதான்.

Read Entire Article