Last Updated:May 11, 2026 8:54 AM IST
Siragadikka Aasai Serial | விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை எட்டி சாதனை படைத்துள்ளது.

சின்னத்திரையில் சீரியல்கள் அதிகரித்துவிட்டன. இதனால் போட்டிகளும் கடுமையாகிவிட்டது. சுமார் 1 ஆண்டுகள் ஒரு சீரியல் கடப்பதே பெரும் சவாலாக மாறிவிட்டது. இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக ஆயிரமாவது எபிசோடை எட்டி சாதனை படைத்துள்ளது. அந்த சீரியலின் இந்த மைல்கல் சாதனைக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கதைக்களம் மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் தான். குறிப்பாக இந்த தொடரின் ஹீரோ, ஹீரோயினான முத்து மற்றும் மீனா இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மற்ற சீரியல்களை போல் குறிப்பிட்ட சில கேரக்டர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த தொடரில் உள்ள எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதேபோல் கதைக்களத்தில் ட்விஸ்டுக்கும் பஞ்சமில்லாததால், ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். எப்போது ரோகிணி மாட்டுவார் என்றே இத்தனை வருடமும் கதை களம் நகர்ந்து சென்றது. தற்போது ரோகிணி மாட்டிய பிறகு மனோஜுடன் ஒன்று சேர்வாரா என்று தான் கதை செல்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலை போல் 1000 எபிசோடு கடந்து ஒளிபரப்பான சில சீரியல்களும் விஜய் டிவியில் உள்ளன. விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இதன் முதல் சீசன், கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த சீரியல் 1348 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முடிவடைந்த உடனேயே அதன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தொடங்கினர். தற்போது அந்த சீரியலும் டிஆர்பியில் சக்கைப் போடு போட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதே போல் பாரதி கண்ணம்மா சீரியலும் ஹிட் சீரியல் தான். இந்த சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல் 1036 எபிசோடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷினி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்தவுடன் அதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், 133 எபிசோடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பெண்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருந்தது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியல் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் 2025-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஓடிய சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியல் ஒட்டுமொத்தமாக 1469 எபிசோடுகள் ஒளிபரப்பாகியது. இந்த சீரியலின் சாதனையை சிறகடிக்க ஆசை சீரியல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஹோட்டலில் துண்டுகள் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன?
ஹோட்டல் துணிகள் வெண்மையாக இருக்க வெந்நீர், வினிகர் பயன்படுத்தப்படுகின்றன.
பெரிய தொழில்துறை இயந்திரங்களில் துணிகள் துவைக்கப்படுகிறது.
உயர்தர எகிப்தியன் காட்டன் துணிகள் பயன்படுத்தப்படுகிறது.
.png)








English (US) ·