Last Updated:Jul 22, 2026 10:44 AM IST
Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று கர்ப்பத்திற்கு நீ தான் காரணமா என மொத்த குடும்பமும் மனோஜை சுற்றி வளைத்து கேட்கின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ரோகிணி விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு அந்த குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா, கடவுளே எங்கள் பந்தத்தை முடிக்க கூடாது என நினைக்கிறார். இதனால் நான் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என கராராக சொல்லுவிட்டு அண்ணாமலை காலில் விழுந்து அவரே ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு செல்கிறார்.
பிறகு இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாமலை மனோஜிடம் நீ தான் காரணமா, என்ன நடந்துச்சு என்று சொல்லு,அப்போதான் ஒரு முடிவு எடுக்க முடியும் என சொல்கிறார். முத்துவும் மனோஜை அடிக்க பாய்ந்து உண்மையை சொல்லுடா நீ ரோகிணியோடு சேர்ந்து சுத்தியதை நானே பார்த்து இருக்கிறேன் என சொல்கிறார்.
மேலும் அண்ணாமலை ரோகிணி இந்த வீட்டை வீட்டு சென்று 6 மாதம் ஆகிவிட்டது என்று கேட்க, மனோஜோ சத்தியமா நான் எதுவுமே பண்ணலப்பா, அவ பொய் சொல்றா, நான் இதற்கு காரணம் இல்ல அம்மா நீங்க என்னை நம்புறீங்களா வேறு யாரும் நம்ப வேண்டாம் என கூறிவிட்டு பதற்றத்தோடு வெளியேறிவிடுகிறார்.
பிறகு விஜயாவோ அவளே ஒரு பித்தலாட்டக்காரி ஏற்கனவே ஒரு குழந்தைக்கு மனோஜை அப்பாவாக்க பார்த்தால் இப்போ யாரோட பிள்ளைக்கோ என் புள்ளைய அப்பானு சொல்றா என்று கூறி திட்டிவிடுகிறார். இதனை கேட்ட மீனா ஏன் அத்தை இப்படி ரோகிணி குணத்தை பற்றி தப்பா பேசுறீங்க என கேட்கிறார். உடனே விஜயாவும் அவரின் வாயை அடைத்துவிடுகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த ரோகிணியிடம் என்ன நடந்தது என்று அவரது அம்மா கேட்க, வித்யாவும் நடந்த விஷயத்தை சொல்கிறார். மேலும் ரோகிணி கர்ப்பமாக இருப்பதாகவும் கூற அவர் அதிர்ச்சியடைகிறார். மாப்பிள்ளை கூட பிரிஞ்சு தானே இருந்த, இது எப்படி என கேள்வி எழுப்புகிறார்.
உடனே ரோகிணியோ நான் ஒரு நாள் மனோஜின் கடையில் தங்கியதாக சொன்னேன்ல அன்று தான் என சொல்கிறார். இதற்கு அவர் ஒத்துக்கொள்வாரா, அவரது குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்க, எது எப்படியோ என் இன்னொரு குழந்தையும் அப்பா இல்லாமல் வளரக்கூடாது, நான் விட மாட்டேன் என்று ரோகிணியும் சபதம் எடுக்கிறார்.
இதற்கிடையில் மனோஜோ கனகா கழுத்தில் திருமணம் செய்து பணத்தை வாங்கிவிட்டு நல்லா பிரச்சனையில் சிக்கி கொண்டதாக நினைத்து புலம்புகிறார். இது வீட்டிற்கு தெரியவந்தால் என்னாகுமோ, போலீசாரால் கைது செய்யப்படுவாரா, அடுத்து என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

போஸ்ட் ஆபிஸில் மனைவி பெயரில் ரூ.50,000 FD; எவ்வளவு கிடைக்கும்?
மனைவி பெயரில் ரூ.50,000 FD; 5 வருட முடிவில் ரூ.72,497 கிடைக்கும்.
7.50% வட்டியுடன் அரசு உத்தரவாதத்துடன் வரிச் சலுகையும் அளிக்கிறது.
ரூ.50,000 முதலீட்டில் ரூ.22,497 வட்டி லாபம் எந்த அபாயமும் இன்றி உறுதி.
.png)








English (US) ·