Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?

12 minutes ago 15

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சிந்தாமணியை சந்தித்து பேசி உள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read

Published : May 19 2026, 08:42 AM IST

25

சிந்தாமணியை சந்திக்கும் முத்து

Image Credit : jiohotstar

சிந்தாமணியை சந்திக்கும் முத்து

சிந்தாமணி தான் தங்கள் வீடு ஜப்தி செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என்பதை அறிந்ததும் முத்துவும், மீனாவும் நேராக கிளம்பி சிந்தாமணியை பார்க்க செல்கின்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவரை மடக்கிப் பிடித்த மீனா, எங்க அத்தையை நம்ப வச்சு ஏமாத்திட்டேல்ல என சொல்ல, நான் என்னுடைய வேலையை தான் செய்தேன். வட்டி பிசினஸ்ல இதெல்லாம் சகஜம் தான் என கூறுகிறார். அதற்கு முத்து, எங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க டைம் வேணும், அதுவரைக்கு வீட்டுக்கு வச்சிருக்க சீல்-ஐ நீக்கணும் என சொல்ல. அதை செய்யணும்னா ஒரு கண்டிஷன் இருக்கு என கூறுகிறார் சிந்தாமணி.

35

சிந்தாமணி போட்ட கண்டிஷன்

Image Credit : jiohotstar

சிந்தாமணி போட்ட கண்டிஷன்

என்ன கண்டிஷன் என மீனா கேட்க, அதற்கு சிந்தாமணி, நீ இப்போ இருக்குற பூ வியாபாரிகள் சங்க தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறுகிறார். நீ விலகிவிட்டால் உனக்கு அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகள் வாங்கிய என்னை அந்த பதவியில் அமர வைப்பார்கள். நீ அந்த பதவியில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பதை பார்க்க முடியல என கூறுகிறார் சிந்தாமணி. நீ பதவியில் இருந்து விலகுவதாக இருந்தால், உங்கள் வீட்டுக்கு வச்சிருக்க சீல்-ஐ அகற்ற நான் சம்மதிப்பேன் என கூறுகிறார். இதைக்கேட்ட முத்து கடுப்பாகி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

45

விஜயாவுக்கு தெரியவரும் உண்மை

Image Credit : jiohotstar

விஜயாவுக்கு தெரியவரும் உண்மை

பின்னர் இருவரும் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு விஜயா படுப்பதற்காக கொசுவலை எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த விஜயா, நான் ஏசி இல்லாம தூங்குனது இல்ல என சொன்னதும், சத்யா அவருக்காக ஒரு ஏர் கூலரை வாங்கி வந்திருப்பதாக சொல்கிறார். அதையும் மட்டம் தட்டி பேசுகிறார் விஜயா. அப்போது தான் சிந்தாமணி செய்த சூழ்ச்சியை பற்றி கூறுகிறார் விஜயா. அதையெல்லாம் கேட்டு ஷாக் ஆகிறார் விஜயா. அப்போது அவரிடம் நான் அப்பவே சொன்னேன் அந்த பொம்பள கூட பழகாதனு கேட்டியா, இப்போ பாரு என்ன ஆச்சுனு என திட்டுகிறார்.

55

பதவியை தூக்கி எறிய முடிவெடுக்கும் மீனா

Image Credit : jiohotstar

பதவியை தூக்கி எறிய முடிவெடுக்கும் மீனா

மறுபுறம் முத்துவும், மீனாவும் இரவு மாடியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் தலைவி பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என கூறுகிறார் மீனா. இங்க அத்தை கஷ்டப்படுறாங்க, அதனால் அந்த பதவியை விட்டு விலகி நம்ம வீட்டை மீட்கலாம் என கூறுகிறார் மீனா. அவரின் முடிவை எதிர்க்கும் முத்து, உனக்கு ஓட்டு போட்டவங்களை எல்லாம் ஏமாத்துன மாதிரி ஆகிடும், தயவு செஞ்சு நீ அப்படி பண்ண வேண்டாம் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read Entire Article