Last Updated:May 19, 2026 8:46 AM IST
‘கருப்பு’ படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்த இளைஞர் ஒருவர் தஞ்சை திரையரங்கில் சாமி ஆடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News18
இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள சில உணர்ச்சிபூர்வமான காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சையில் உள்ள பிரேம் சினிமாஸ் திரையரங்கில் ‘கருப்பு’ திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, படத்தின் காட்சிகளால் உணர்ச்சிவசப்பட்ட இளைஞர் ஒருவர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சாமி ஆடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் திடீரென கீழே விழுந்த நிலையில், திரையரங்க ஊழியர்கள் உடனடியாக அவரை ஆசுவாசப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)








English (US) ·