Siragadikka Aasai : ரேகாவுக்கு டேக்கா கொடுக்கும் சிந்தாமணி... கடும் அப்செட்டில் விஜயா

1 hour ago 15

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ள சிந்தாமணி, அவரை சென்னை வர விடாமல் தடுக்க பிளான் போடுகிறார்.

2 Min read

Published : May 09 2026, 08:15 AM IST

15

Siragadikka Aasai Serial Today Episode

Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தற்போது சுருதி வீட்டில் தங்கி இருக்கிறார். வசதிக்கு ஆசைப்பட்டு அங்கு சென்ற விஜயா, ஏண்டா இங்க வந்தோம் என ஃபீல் பண்ணும் அளவுக்கு அவரது வீட்டில் அவரை நடத்துகிறார்கள். மறுபுறம் அண்ணாமலை வசதி கம்மியான மீனா வீட்டில் தங்கி இருந்தாலும் அவரை சந்தோசமாக பார்த்துக் கொள்கிறார்கள். விஜயாவைப் போல் அவரது மகன் மனோஜ் ஷோரூமில் எலி தொல்லைகளுக்கு நடுவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ரோகினியை சந்தித்து அவருக்கு சிந்தாமணி ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25

மனோஜுடன் தங்கும் ரோகினி

Image Credit : jiohotstar

மனோஜுடன் தங்கும் ரோகினி

ரோகினிடம் இதுதான் உனக்கு சரியான நேரம் நீ மனோஜை சந்தித்து அவனை உன் வழிக்கு கொண்டு வரப்பார் என சொல்கிறார் சிந்தாமணி. அதற்கு அவரும் கண்டிப்பாக நான் இந்த சான்ஸை மிஸ் பண்ண மாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின்னர் மனோஜ் ஷோரூம்-க்கு செல்லும் ரோகினி, அங்கு அவர் எலியை பிடிக்க என்ன மருந்து வைக்கலாம் என பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சிரிக்கிறார். பின்னர் மனோஜிடம் நீ என் வீட்டில் வந்து தங்கலாமே என ரோகினி சொல்ல, அதற்கு அவர் அம்மாவுக்கு தெரிஞ்சுச்சுனா அவ்வளவுதான் என கூறுகிறார். பின்னர் எலியை பிடிக்க தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்லும் ரோகிணி, தானும் இன்று இரவு உன்னுடனே வந்து தங்குகிறேன் என சொல்லி இருக்கிறார். இந்த மக்கு மனோஜும் அதற்கு ஓகே சொல்லி உள்ளார்.

35

சிந்தாமணியின் பிளான் என்ன?

Image Credit : jiohotstar

சிந்தாமணியின் பிளான் என்ன?

மறுபுறம் சிந்தாமணியை சந்திக்க அவரது கணவர் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் என்ன விஷயம் என சிந்தாமணி கேட்க, அவரோ ஹைதராபாத்தில் உள்ள ரேகா திரும்பவும் சென்னைக்கு வர உள்ளதாக சிந்தாமணியிடம் கூறுகிறார். அவளுக்கு மட்டும் நாம் வேண்டும் என்று அவளை அங்கு அனுப்பி வைத்த விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான் என சிந்தாமணியின் கணவர் சொல்ல, அவளை இங்கு வரவிடாமல் தடுக்க என்னிடம் ஒரு நல்ல பிளான் இருக்கிறது என கூறுகிறார் சிந்தாமணி. அது என்ன பிளான் என்பது பற்றி பேச தன் கணவரை உள்ளே அழைத்துச் செல்கிறார். அந்த பிளான் பற்றி சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.

45

அவமானப்பட்ட விஜயா

Image Credit : jiohotstar

அவமானப்பட்ட விஜயா

இதையடுத்து விஜயாவை காட்டுகிறார்கள். சுருதி வீட்டு மாடிக்கு விஜயா சென்றபோது அங்கு சுருதியின் அம்மா ரூமை பூட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் விஜயாவிடம் தான் வெளியே செல்ல இருப்பதாகவும் வீட்டைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு செல்கிறார். தான் இருக்கும்போது வீட்டு அறையின் கதவை சுருதி அம்மா பூட்டி சென்றதால் கடும் அப்செட் ஆன விஜயா, தன்னுடைய தோழி பார்வதிக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் நான் இப்போ எங்கே இருக்கிறேன் தெரியுமா என கேட்க, அவரும் நீ உன்னோட வசதியான சம்மந்தி வீட்ல இருக்குற என்று தெரியும் என கூறுகிறார். எல்லா பிரச்சனையும் தெரிஞ்சும் எனக்கு நீ போன் பண்ணவே இல்ல என பார்வதி இடம் சண்டை போடுகிறார் விஜயா.

55

கடும் கோபத்தில் விஜயா

Image Credit : jiohotstar

கடும் கோபத்தில் விஜயா

அதுமட்டுமின்றி தனக்கு இங்கு இருக்க பிடிக்கவே இல்லை நான் கிளம்பி உன் வீட்டுக்கு வர போகிறேன் என சொல்கிறார் விஜயா. அதற்கு யோசிக்கும் பார்வதி, நீ மட்டும் இங்கு வந்தால் சரியா இருக்காது. நீ உன்னுடைய கணவர் அண்ணாமலையுடன் இங்கு வந்து தாராளமாக தங்கிக் கொள்ளலாம். ஆனால் தனியா வந்து தங்க வேண்டாம் என கூறிவிடுகிறார் பார்வதி. இதனால் மேலும் கோபமடைந்த விஜயா, என்னையே வர வேண்டாம்னு சொல்லிட்ட இல்ல என கோபப்பட்டு போனை கட் பண்ணி விடுகிறார். இதை அடுத்து என்னானது? ஸ்ருதி வீட்டில் விஜயாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி என்ன? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read Entire Article