Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, ஸ்ருதி வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு மனோஜின் ஷோரூமுக்கு சென்றிருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
2 Min read
Published : May 13 2026, 09:05 AM IST
15

Image Credit : jiohotstar
Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, ஸ்ருதியின் அம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில், அங்கு நடந்த பார்ட்டியில் அவரை நடனம் ஆட சொல்லி அனைவரும் வற்புறுத்தி இருந்தனர். ஆனால் விஜயாவுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அனைவர் முன்னிலையிலும் கத்திவிட்டு, ரூமுக்கு சென்றுவிடுகிறார். அங்கு தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுகிறார் விஜயா. வசதிக்கு ஆசைப்பட்டு வந்த இடத்தில் நம்மை இப்படி அவமானப்படுத்திவிட்டார்களே என்கிற கோபத்தில் இருக்கிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source
25
Image Credit : jiohotstar
வீட்டை விட்டு வெளியேறும் விஜயா
கோபத்தில் ஸ்ருதி அம்மா வீட்டில் இருந்து பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார் விஜயா. மறுபுறம் மனோஜ் தன்னுடைய ஷோரூமில், ரோகிணி உடன் இரவில் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதேபோல் அவர் கொண்டு வந்த பூனை, எலியை பிடித்துவிட்டதை அறிந்து சந்தோஷப்படுகிறார். இதனால் எப்படியாவது மனோஜை நம் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்கிற மிதப்பில் ரோகிணி இருக்க, அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. இந்த நேரத்தில் யார் என்று மனோஜ் யோசிக்க, விஜயா, வெளியே இருந்து கத்துகிறார்.
35
Image Credit : jiohotstar
மனோஜுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயா
இதனால் ஷாக் ஆன மனோஜ், உடனடியாக ரோகிணியை எங்காவது சென்று மறைந்து கொள்ளும்படி சொல்கிறார். பின்னர் விஜயாவை உள்ளே அழைத்து வருகிறார் மனோஜ். அவர் என்ன ஆச்சு என விஜயாவிடம் கேட்க, அவரோ ஸ்ருதி வீட்டில் சாப்பாடு சரியில்லை என சொல்லி மழுப்புகிறார். பின்னர் பாத்ரூமுக்கு செல்கிறார் விஜயா. அந்த கேப்பில் ரோகிணியை ஷோரூமில் இருந்து வெளியே அனுப்பி வைக்கிறார் மனோஜ். அவரோ என்ன மனோஜ் இப்படி பாதியிலேயே துரத்திவிடுற என கேட்க, எங்க அம்மா பார்த்தால் அவ்வளவு தான்,. பெரிய பிரச்சனை ஆகிடும் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
45
Image Credit : jiohotstar
மனோஜிடம் விஜயா கேட்ட கேள்வி
பின்னர் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் விஜயா, மனோஜிடம் என்ன பாத்ரூமில் பொட்டு இருக்கு, யாரோடது என கேட்கிறார். அதற்கு அவர், நம்ம ஷோரூமில் நிறைய லேடீஸ் வேலை பார்க்கிறார்கள், அவர்களில் யாராவது ஒட்டி இருப்பார்கள் என சொல்கிறார். மறுபுறம் ஸ்ருதியும், ரவியும் விஜயாவை காணவில்லை என தேடுகிறார்கள். பின்னர் இந்த விஷயத்தை அவர்கள் முத்து - மீனாவிடம் சொல்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக விஜயா, மனோஜ் கடைக்கு தான் சென்றிருப்பார் என்று யூகிக்கிறார்கள். இதையடுத்து அவர்களும் மனோஜின் ஷோரூமிற்கு கிளம்பிச் செல்கிறார்கள்.
55
Image Credit : jiohotstar
ஷோரூமுக்கு வரும் முத்து - மீனா
மறுபுறம் மனோஜின் ஷோரூமில் அவர் தனக்கு வெளி உணவு செட் ஆகாததால், சமைத்து தருமாறு ஜீவா மற்றும் சந்தோஷிடம் சொல்ல, அவர்கள் இருவரும் மனோஜுக்காக ஷோரூமிலேயே சமையல் செய்கிறார்கள். அந்த சமயத்தில் விஜயா, வெளியே இருக்கும் ஷோபாவில் அமர்ந்து, தன்னை அவர்கள் அவமானப்படுத்தியதை நினைத்து கண் கலங்குகிறார். இதையடுத்து என்ன ஆனது? விஜயாவை முத்துவும் மீனாவும் சந்தித்து என்ன சொல்லப் போகிறார்கள்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
.png)
1 hour ago
10






English (US) ·