Last Updated:Feb 16, 2026 5:04 PM IST
மழைக்காலங்களில் நீர் பெருக்கெடுத்து வழியும் கும்பாவுருட்டி அருவி, அதன் இயற்கை அழகால் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முக்கிய தலமாக திகழ்கிறது.

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், அதன் இயற்கை அழகு மற்றும் பல்வேறு அருவிகளால் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி வருகை தருகின்றனர். மெயின் அருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பாலருவி போன்ற பல அருவிகள் இங்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு அருவியும் தனித்தன்மை கொண்டதாக இருந்து, இயற்கை நீராடலை ரசிக்க விரும்புவோருக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கின்றது.
ஆனால் சில காலங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் சூழல் ஏற்படும். அத்தகைய நேரங்களில் சுற்றுலா பயணிகள் அடுத்ததாக கேரள மாநிலத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவியை நாடுகின்றனர். கொல்லம் மாவட்டத்தில், ஆரியங்காவு பஞ்சாயத்து அருகில் தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, தென்னிந்தியாவின் பிரபலமான இயற்கை சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
அச்சன்கோவில் ஆற்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி, அச்சன்கோவிலிலிருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலேயே மணலாறு அருவியும் அமைந்துள்ளது. மேலும், இந்த பகுதி அடர்ந்த கொன்னி வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால், இயற்கை சூழல் மிகுந்த காட்சியளிக்கிறது. சில சமயங்களில் காட்டு விலங்குகளையும் காண வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடைகாலமாக கருதப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் தண்ணீர் வரத்து குறைவதால், கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுவாக மே மாத இறுதியில் மழை தொடங்கிய பின்னர் அருவி மீண்டும் திறக்கப்பட்டு, குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இருப்பினும், கோடைகாலத்திலேயே மழை பெய்யும் நாட்களில் மட்டும் குறிப்பிட்ட தினங்களில் அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது என்ற நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. மழைக்காலங்களில் நீர் பெருக்கெடுத்து வழியும் கும்பாவுருட்டி அருவி, அதன் இயற்கை அழகால் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முக்கிய தலமாக திகழ்கிறது.

"சிவாயநம" கோசம் விண்ணை முட்ட... ராமநாதசுவாமி கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலம்..!
ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெற்றது
சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதியுலா வந்தனர்
ஏராளமான பக்தர்கள் சிவாயநம கோசம் விண்ணை முட்ட தேரை இழுத்து பக்தி உற்சாகத்தில் கலந்து கொண்டனர்
.png)





English (US) ·