Last Updated:Feb 26, 2026 12:24 PM IST
இன்று முழுக்க சென்னை மெட்ரோ இலவசம் – வெளியான அதிரடி அறிவிப்பு

Ta சென்னையில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 – சூப்பர் 8 போட்டியை முன்னிட்டு போக்குவரத்து ஏற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) இன்று , சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
போட்டி நாளான 26.02.2026 இன்று ரசிகர்கள் நகரின் எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் அரசினர் தோட்டம் (Government Estate) நிலையம் வரை போட்டி நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம். டிக்கெட்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தாலே நுழைவு கிடைக்கும்; தனி மெட்ரோ பயணச்சீட்டு தேவையில்லை.
இன்று ஒரு நுழைவுச்சீட்டின் மூலம் இரண்டு முறை நுழைவும், இரண்டு முறை வெளியேறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவை இன்று நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசினர் தோட்டம் நிலையத்திலிருந்து 26.02.2026 இரவு 12.00 மணிக்கு புறப்படும் ரயில் விம்கோ நகர் வரை இயக்கப்படும். அதேபோல், நீல வழித்தடத்தில் (விமான நிலையம் நோக்கி) சேவையும் நள்ளிரவு 12.00 மணி வரை இயங்கும்.
போட்டி நாளில் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, செல்லுபடியாகும் டிக்கெட் மற்றும் QR குறியீட்டை தயாராக வைத்திருக்குமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை... ட்ரோன், பலூன்கள் பறக்க தடை விதிப்பு !
புதுச்சேரி வருகை தரும் பிரதமர் மோடி நாளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி நகரம் மற்றும் உழவர்கரை பகுதிகள் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது
இந்த உத்தரவை மீறுபவர்கள் நாகரிக பாதுகாப்பு சட்டம், 2023 படி தண்டனைக்கு உட்படுவார்கள்
.png)






English (US) ·