Last Updated:May 12, 2026 3:41 PM IST
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் பதவியேற்றுள்ளார். இதுதொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாட்டுடன் தொடர்பில் இருங்கள்.

17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில் நேற்று சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்றனர். அதை தொடர்ந்து இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்றுள்ளனர்.
Tamil Nadu Live Updates | உங்களோடு எப்போதும் இருப்பேன் - முதலமைச்சர் விஜய்
முன்பு சொன்னது போல இந்த விஜய் உங்களோடு எப்போதும் இருப்பேன் – ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீனை சந்தித்த போது முதலமைச்சர் விஜய் பேச்சு.
#WATCH | முன்பு சொன்னது போல இந்த விஜய் உங்களோடு எப்போதும் இருப்பேன் – ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீனை சந்தித்த போது முதலமைச்சர் விஜய் பேச்சு#IUML #vijay #News18TamilNadu pic.twitter.com/wiX091dgQY
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 12, 2026
Tamil Nadu Live Updates | தவெக சிறப்பான ஆட்சியை அமைக்கும் - காதர் மொய்தீன்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு சிறப்பான ஆட்சியமைக்கும் எனவும், வழிகாட்டு தலங்கள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் முதலமைச்சர் விஜயின் உத்தரவு வரவேற்கத்தக்கது எனவும் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Live Updates | சத்தியமூர்த்தி பவன் செல்லும் முதலமைச்சர் விஜய்
ஐயூஎம்எல் அலுவலகத்தை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.
Tamil Nadu Live Updates | ஐயூஎம்எல் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்
ஐயூஎம்எல் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tamil Nadu Live Updates | அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்
சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில் காமராஜை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
Tamil Nadu LIVE Updates | தவெகவிற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்
சட்டப்பேரவையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு எதிராக வாக்காளிப்பார்கள் என ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu LIVE Updates | திமுக உடன் கூட்டணி பேசியதாக கூறுவது அவதூறு
திமுக உடன் அதிமுக கூட்டணி பேசியதாக சிவி சண்முகம் பேசியது அவதூறான ஒன்றாகும். சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் ஈர்க்கவே சிவி சண்முகம் அப்படி பேசி வருகிறார். அதிமுக என்றுமே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியாகவே செயல்பட்டுள்ளது என ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu LIVE Updates | முதலமைச்சருக்கான சிறப்பு அதிகாரி நியமனம்
முதலமைச்சர் விஜய்க்கான சிறப்பு அதிகரியாக ரிக்கி ரதன்பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகரிக்கான பணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
TN Assembly LIVE Updates | போதைப் பொருட்கள் தடுப்புப் படை - அரசாணை வெளியீடு
மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்க அரசாணை வெளியீடு: முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதல் நாளிலேயே இதற்கு கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்
TN Assembly LIVE Updates | எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

TN Assembly LIVE Updates | பகல் 2 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கும் விஜய்
தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு என சிவி சண்முகம் காலையில் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் பகல் 2 மணிக்கு சி.வி.சண்முகம் அலுவலகத்தில் ஆதரவு அளிக்கும் அதிமுக எம்எல்ஏக்களை விஜய் சந்திக்க உள்ளார்.
TN Assembly LIVE Updates | சபாநாயகருடன் ஈபிஎஸ் இன்றி அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்கக்கோரி நேற்று தற்காலிக சபாநாயரிடம் மனு கொடுக்கப்பட்டது. இன்று சிவி சண்முகம் தலைமையில் சபாநாயகர் ஜேசிடி பிராபகரை சந்தித்து மீண்டும் அதுதொடர்பான மனு அளிக்கப்பட்டுள்ளது.
TN Assembly LIVE Updates | கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பேரவை தலைவர்.!
தமிழ்தாயை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டின் இப்படி முதலமைச்சரா என்று பொதுமக்கள் பார்க்கும் முதல்மைச்சர், அமைச்சர், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பேரவைத் தலைவர் மனைவியை பற்றி பேசும் போது கண் கலங்கினார்.
TN Assembly LIVE Updates | தவெகவிற்கு அவையில் மதிப்பு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்.!
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு பேரவையின் கவனத்திற்கு கொண்டு அந்த சட்டமாக் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அவைக்கு உள்ளது. இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினர் கொண்ட கட்சிகள் இங்கு இடம் பெற்று இருந்தால் அதிக உறுப்பினர்கள் கொண்ட தவெக கட்சிகள் உறுப்பினர்கள் கட்சிகளுக்கும் இந்த அவையில் மதிப்பு அளிக்க வேண்டும் – முதலமைச்சர் விஜய்.
TN Assembly LIVE Updates | "திமுக தோழமை கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதற்கு வாழ்த்துக்கள்"
பெரும்பான்மையை மக்கள் ஆளும் கட்சிக்கு வழங்காமல் போனாலும், திமுக தோழமை கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதற்கு வாழ்த்துகள். பணிகள் சிறக்கப்பட்டும். வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, மக்களை பிரிக்கும் சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்.
TN Assembly LIVE Updates | நீண்ட வருடங்களுக்கு பின் நிறைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் - உதயநிதி.!
தமிழ்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. நீண்ட வருடங்களுக்கு பின் நிறைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளீர்கள். வாழ்த்துகள் – உதயநிதி
TN Assembly LIVE Updates | முதலமைச்சரும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் - உதயநிதி.!
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சட்டசபை இந்த தமிழ்நாடு சட்டசபை. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் போதும் அனைவரும் ஒரே வரிசையில் நின்று செயல்படுவோம். அதை தான் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த புதிய அரசு உங்களுக்கு வாக்களித்தாக மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். முதலமைச்சரும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் – உதயநிதி
TN Assembly LIVE Updates | திமுக என்றைக்கும் ஆக்க சக்தி தான் - உதயநிதி ஸ்டாலின்.!
நீங்கள் சிரித்த முகத்திற்கு சொந்தகாரர் என பல சொல்லி கேள்விபட்டுள்ளேன். உங்களுக்கு பேரவை மரபுகள், விதிகள் புதிது அல்ல. நீங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர் வீட்டுகளுக்கு சென்று வாழ்த்துகளை பெற்றார். அந்த அரசியல் நாகரீகம் இந்த அவையிலும் இருக்க வேண்டும். திமுக என்றைக்கும் ஆக்க சக்தி தான். எதிரி கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர் கட்சியாக இருந்து செயல்படும் – உதயநிதி ஸ்டாலின்
TN Assembly LIVE Updates | வாக்களித்த மக்களுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்
பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எங்கள் தலைவர்களை வணங்கி உரையை தொடங்குகிறேன். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு எனது நன்றி. எங்களின் கூட்டணிக்கு 1.80 கோடி வாக்குகளை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி. வரலாற்று சிறப்புமிக்க சட்டசபையில் தலைவர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தலைவர் சார்பாக வாழ்த்துகள் – உதயநிதி ஸ்டாலின்
TN Assembly LIVE Updates | அவையின் மரபும், மாண்பும் காக்கப்பட வேண்டும் - எஸ்.பி.வேலுமணி
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளீர்கள். சிறப்பாக பணியாற்ற கூடிய பொறுப்பை பெற்றுள்ளீர்கள். அவையின் மரபும், மாண்பும் காக்கப்பட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

TN Assembly LIVE Updates | நடுநிலையோடு, தராசு போல் செயல்பட வேண்டும் - இபிஎஸ்
நடுநிலையோடு, தராசு போல் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று பாராமல் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் சாராமல் நீங்கள் செயல்பட வேண்டும். அனைவருக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். முதலமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள் – எடப்பாடி பழனிசாமி
TN Assembly LIVE Updates | தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்.!
சட்டசபையின் மாண்பும், மரபும் இம்மி அளவு மாறாமல் நடுநிலையோடு இருந்து தராசு போல் இருந்து அனைவருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும். ஜே.சி.டி நடுநிலையாக இருந்து தராசாக இருந்து அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஆளுங்கட்சியை மட்டும் கேமரா போகஸ் பண்ணாமல் அனைவருக்கும் சரிசமமாக வாய்ப்பு வழங்க வேண்டும். அன்பு தம்பிக்கு விஜய்க்கு அண்ணான இருந்த விஜயகாந்த் இங்கே நடக்கும் அனைத்து அனைத்து மக்களுக்கும் தெரிய வேண்டும் என்று கூறினார். எனவே இந்த நிகழ்வுகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்
TN Assembly LIVE Updates | சனாதன கொள்கைக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வேண்டும் - வன்னியரசு.!
சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபாகர் மற்றும் துணை சபாநாயகருக்கு வாழ்த்துகள். பெரும்பான்மை வாதத்தை விட சிறுபான்மை மக்களின் குரல் வலிமை பெற வேண்டும். இந்த அவையில் ஆளும் கட்சியின் குரலை விட எதிர்கட்சியின் குரல் வலிமை பெற வேண்டும். விசிக குரல் என்பது தமிழ்நாட்டின் குரல் . அந்த குரல் இந்த அவையில் மழுப்படாமல் எழுப்ப பட வேண்டும் என்று வலியுத்திகிறேன். 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்புகள் விசிக சார்பில் வரவேற்பு. மத்திய அரசு முன் எடுக்கும் சனாதன கொள்கைக்கு எதிரான அரசியல் இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் – வன்னியரசு
TN Assembly LIVE Updates | தவெகவுக்கு ஆதரவு.. அமமுக காமராஜ்.!
இளைஞர்கள் அதிக அளவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். முதலமைச்சர் நல்ல இளைஞராக இருக்கும் காரணத்தினால், சிறந்த ஆட்சியை ஏற்படுத்தி தருவார் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்றைக்கு இறந்த அரசியல் சூழலால் சில கசப்பான சூழல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் அவரால்தான் நல்லாட்சி தர முடியும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, சென்னை சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறது. நிச்சயமாக நீங்கள் நல்லாட்சி தர வேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இளைஞர்களைப் போல் நாங்களும் உங்களை நம்புகிறோம். உங்கள் அரசு தொடர எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் – அமமுக காமராஜ்.
TN Assembly LIVE Updates | சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த முதலமைச்சர் - எதிர்க்கட்சி தலைவர்.!
17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று போட்டியின்றி தேர்வாகி உள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பெயர்களை தற்காலிக சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சபாநாயகரை அவரது இருக்கையில் கொண்டு சென்று அமர வைக்கும் மரபு கடைபிடிக்கப்பட்டது.
TN Assembly LIVE Updates | புதிதாக பொறுப்பேற்ற சபாநாயகருக்கு எம்.எல்.ஏக்கள் வாழ்த்து.!
புதிதாக பொறுப்பேற்றுள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
TN Assembly LIVE Updates | துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு.!
சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

TN Assembly LIVE Updates | சபாநாயகராக பொறுப்பேற்ற ஜே.சி.டி. பிரபாகர்..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் நேற்று சட்டமன்றத்தில் பொறுப்பேற்ற நிலையிஒ இன்று சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் வார்னிங்!
தமிழகத்தில் 7 மாவட்டங்கள், காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
மேற்கு தொடர்ச்சி மலை, கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
.png)








English (US) ·