College Admission 2026: பிளஸ் 2 முடித்த மாணவர்களே உடனே முந்துங்கள்!! அரசு கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்கள் தொடக்கம்...

1 hour ago 14

Last Updated:May 12, 2026 4:12 PM IST

பிளஸ் 2க்கு பிறகு பொறியியல், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை, பாலிடெக்னிக் உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன.

அரசு கல்லூரி சேர்க்கை

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்காக அரசு மற்றும் அரசு சார்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை, பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரி சேர்க்கை

பொறியியல் கல்லூரி சேர்க்கை: தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான TNEA (Tamil Nadu Engineering Admissions) விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 02.06.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களது மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும்.

அரசு கல்லூரி சேர்க்கை

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் : அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான TNGASA விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இந்த விண்ணப்பங்களை 29.05.2026க்குள் பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளதால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

அரசு கல்லூரி சேர்க்கை

வேளாண்மை படிப்புகளுக்கான சேர்க்கை: வேளாண்மைத் துறையில் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக Tamil Nadu Agricultural University மற்றும் Annamalai University ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான கடைசி நாள் 08.06.2026 ஆகும். விவசாயம், தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.6 ஆகும். விவசாயம், தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அரசு கல்லூரி சேர்க்கை

பாலிடெக்னிக் சேர்க்கை: மேலும், தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் தொடங்கியுள்ளன. பாலிடெக்னிக் சேர்க்கைக்கான கடைசி தேதி 30.05.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு கல்லூரி சேர்க்கை

 இதனுடன், Tamil Nadu Dr. Ambedkar Law University-யின் கீழ் செயல்படும் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான விண்ணப்ப அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், தேவையான சான்றிதழ்களுடன் உடனடியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்ற கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் ரூ.5,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்குப் பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | Post Office

ரூ.5,000 டெபாசிட்.. 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | Post Office

  • RDல் மாதம் ரூ.5,000 டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.3,56,830 கிடைக்கும்.

  • மொத்த முதலீடு ரூ.3,00,000; இதில் வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.56,830 ஆகும்.

  • இந்த திட்டத்தில் 6.7% வட்டி விகிதம்; குறைந்தபட்சம் மாதம் ரூ.100 டெபாசிட்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article